விபத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரி பலி

243 0

அம்பலாந்தோட்ட நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிவில் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இவர் நேற்றிரவு மற்றுமொரு அதிகாரியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வேளையில், அம்பலாந்தோட்டையில் இருந்து தங்காலை நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் மோதி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த 43 வயதான ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment