மத்தியும் மாகாணமும் இணைந்து செயல்த்திட்டம் – கட்டுக்கரையில் மீன்குஞ்சுகள் வைப்பிலடப்பட்டது (படங்கள்)

349 0

IMG_9765வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்தின்கீழ் நன்னீர் மீன்குஞ்சுகளை வடக்கில் உள்ள குளங்களில் வைப்பிலிடும் நிகழ்வின் ஒரு பகுதியாக மன்னார் கட்டுக்கரை குளத்தை மையமாக கொண்டு நன்னீர்மீன்பிடியில் ஈடுபடும் சங்கங்களுக்கு சுமார் 75000 மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் நிகழ்வு 22-08-2016 திங்கள் மாலை இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் மத்திய மீன்பிடி அமைசர் மகிந்த அமரவீர அவர்களும், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், மாகாண சபையின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தேசிய நீர்வாழ் உயிரினங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், மாவட்ட உத்தியோகத்தர்ம, ற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் நிகழ்வுக்குறித்து அமைச்சர் டெனிஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அபிவிருத்தி பணிகள் சகலவற்றிலும் மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து செயற்படுவதுபோல உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் விரைவில் எமது நாடும் அபிவிருத்தி அடைந்து தன்னிறைவான நாடாக மாறும் என்றும், இவ் மாகாண அரசின் செயல்திட்டத்தை மிகுந்த மகிழ்வுடன் ஆரம்பித்துவைத்த மத்திய மீன்பிடி அமைச்சர் அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

IMG_9766 IMG_9768 IMG_9770