டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக புதிய வகை பக்டீரியா பயன்படுத்துவது தொடர்பில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வொல்பேச்சியா” என்ற பக்டீரியாவை பயன்படுத்துவது குறித்தே இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள உள்ளதாக அமைச்சர் கூறினார். டெங்கு வைரசின் பரவலை தடுப்பதற்காக குறித்த பக்டீரியா தற்போது அவுஸ்திரேலியா, வியட்நாம், இந்தோனேசியா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய