இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை” நன்றி கடிதம் அனுப்­பினார் ஜனா­தி­பதி

19 0

இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை என்று பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­யாற்­றிய நெஸ்பி பிர­பு­வுக்கு ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன இர­க­சி­ய­மாக நன் றிக் கடிதம் அனுப்­பி­யுள்ளார் என்று கூட்டு எதி­ரணி பாரா­ளுமன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள் ளார்.

இறுதிப் போரில் ஐ.நா. அறிக்­கையில் கூறப்­பட்­டது போல 40 ஆயிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரை­யா­ன­வர்­களே கொல்­லப்­பட்­டனர் என்றும், அவர்­களில் கால்­வாசிப் பேர் சாதா­ரண உடையில் இருந்த புலிகள் என்றும் கடந்த ஒக்­டோபர் மாதம் பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­யாற்­றிய போது, நெஸ்பி பிரபு கூறி­யி­ருந்தார்.

இந்த நிலையில், அர­சுக்கு ஆத­ர­வாக கருத்து வெளி­யிட்ட நெஸ்பி பிர­ பு­வுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நன்றி தெரி­வித்து கடிதம் எழு­தி­யுள்ளார் என்றும் தமிழ் பிரி­வி­னை­வா­தி­களின் அழுத்­தங்­களால் அந் தக் கடிதம் இர­க­சி­ய­மாக வைக்­கப்­பட்­டுள்­ளது என்றும் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

இது தொடர்­பாக  வெளி­வி­வ­காரச் செய­லரின் இணைப்புக் கடி­தத்தில், ஜனா­தி­ப­தியின்  கடி­தத்தின் உள்­ள­டக்­கம்­ இ­லங்கை  அல்லது பிரித்தானிய ஊடகங்களுக்குப் பகிரப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.