வல்லைக் கடலுக்குள் பாய்ந்த வாகனம்

Posted by - December 19, 2017

யாழ்ப்பாணம், வல்லை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த அரச திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனமொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்துள்ளது.குறித்த  விபத்து சம்பவானது இன்று காலை வல்லைவெளி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.அரச திணைக்களத்திற்கு சொந்தமான டபிள்கப் ரக வாகனமொன்றே இவ்வாறு வல்லை பாலத்திற்கு அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான போதும் இச் சம்பவத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீடொன்று எரிந்து நாசம்

Posted by - December 19, 2017

வவுனியா, கணேசபுரம் 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கணேசபுரம், 40 வீட்டுத்திட்டப் பகுதியில் வசிக்கும் இராமமூர்த்தி ஜெகநாதன் குடும்பத்தினர் வவுனியா நகருக்கு சென்று வீடு திரும்பிய நிலையிலேயே அவர்கள் வசித்த தற்காலிக வீடு எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அயலவர்கள் தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதும், வீட்டு உபகரணங்கள், உடு

பாகிஸ்தான்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீது நவாஸ் ஷரிப் பாய்ச்சல்

Posted by - December 19, 2017

ஊழல் வழக்கில் பிரதமரான தன்னை தகுதி நீக்கம் செய்துவிட்டு இம்ரான் கானை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் இரட்டை நிலைப்பாட்டுக்கு நவாஸ் ஷரிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் சூழ்ச்சி ஒருபோதும் மீண்டும் வெற்றியளிக்காது -சந்திரிக்கா

Posted by - December 19, 2017

சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தி சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக 1980 ஆண்டில் செய்த சூழ்ச்சியை மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க , கட்சியின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கான நடவடிக்கைகளை பின்னர் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டார். உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்புமனு தாக்கல் இன்று முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதவியை வழங்க அவர் முட்டாளும் அல்ல வாய்ப்பை நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல- மஹிந்த

Posted by - December 19, 2017

தலைமை பதவியை வழங்குவதற்கு அவர் முட்டாளும் அல்ல அவ்வாறு வழங்கியும் நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சோடிக்கப்பட்ட பொய்யாக பல கருத்துக்கள் உலாவுவதாகவும் குறிப்பிட்டார். சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை தருவதாக கூறியதாகவும் கூறுகின்றனர்.  அவ்வாறு வழங்குவதற்கு அவர்கள் முட்டாள்களும் அல்ல. அதே போன்று அவ்வாறானதொரு வாய்ப்பு வரும் போது நிராகரிக்க நான் முட்டாளும் அல்ல. உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே

ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தை தோற்கடித்த அமெரிக்கா

Posted by - December 19, 2017

இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேம் நகரை அறிவித்த முடிவை டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்த தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா தோற்கடித்தது.

லெபனானில் இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரியை கொன்றவர் கைது!

Posted by - December 19, 2017

லெபனானில் இங்கிலாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியை கற்பழித்துக் கொன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்: ஐ.நா

Posted by - December 19, 2017

வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் 1.65 கோடி பேருடன் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலைக்குதான் எங்கள் ஓட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பெண்கள் உறுதி

Posted by - December 19, 2017

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இறுதி கட்ட பிரசாரத்தை தீவிரப் படுத்தி ஓட்டு கேட்டார்.

அம்மாவின் உண்மை விசுவாசி மதுசூதனனை வெற்றி பெற செய்யுங்கள்: அமைச்சர் காமராஜ் பிரசாரம்

Posted by - December 19, 2017

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து இறுதிகட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.