வல்லைக் கடலுக்குள் பாய்ந்த வாகனம்

4147 155

யாழ்ப்பாணம், வல்லை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த அரச திணைக்களத்திற்குச் சொந்தமான வாகனமொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்துள்ளது.குறித்த  விபத்து சம்பவானது இன்று காலை வல்லைவெளி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.அரச திணைக்களத்திற்கு சொந்தமான டபிள்கப் ரக வாகனமொன்றே இவ்வாறு வல்லை பாலத்திற்கு அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான போதும் இச் சம்பவத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment