நாட்டில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைவாக பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு ,ஊவா மற்றும் தென்மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகலாம். இதேவேளை, மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ,திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யும். நாட்டின் பெரும்பாலன கடற்கரையோரங்களில் மாலை மற்றும் இரவுவேளைகளில் மழை