வடக்கு முதல்வரின் சொற்படி செயற்படுங்கள்- அங்கஜன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார். யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். வரலாற்றில் முதல்தடவையாக யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடுகின்றது. அந்தவகையில் இதுவே தமக்கு கிடைத்த பாரிய

