ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றிய 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
உண்மையைக் கண்டறிதல் மற்றும் பலவந்த கடத்தல்கள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்களில் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த சைப இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

