‘நியர் ஸ்பேஸ்’ பகுதியில் சீனா, ஆளில்லா உளவு விமானங்களை சோதித்து அதிரடி

Posted by - November 1, 2017

நியர் ஸ்பேஸ்’ பகுதியில் ஆளில்லா உளவு விமானங்களை ஏவி சோதித்து சீனா அதிரடி சோதனை நடத்தி உள்ளது.

முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Posted by - November 1, 2017

வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

மக்கள் பணியில் 75 ஆண்டுகள்: சென்னையில் 6-ந்தேதி தினத்தந்தி பவள விழா – பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

Posted by - November 1, 2017

‘தினத்தந்தி’ பவள விழா சென்னையில் 6-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறு கிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வாழ்த்தி பேசுகிறார்.

நவம்பர் 5 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

Posted by - November 1, 2017

தமிழகத்தில் நவம்பர் 5-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

கேகாலையில் பல்வேறு நுட்பங்கள் அடங்கிய கிணறு

Posted by - November 1, 2017

கேகாலையில் பல்வேறு நுட்பங்கள் அடங்கிய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.குடிநீரில் உப்புத்தன்மையை நீக்கி நீரை பாதுகாப்பதற்கு அவசியமான தொழில்நுட்பம் இந்த கிணற்றில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கேகாலை- ரம்புக்கன வீதியின் பத்தமுரே நவகமுவ பழைய தேவாலயத்திற்கு அருகில் இந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.சுமார் 5 அடி கொண்ட இந்த கிணற்றின் மீது பெரிய அளவிலான கருங்கல் வைத்து குப்பை சேராத வகையில் ஒரு அடி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாரியளவிலான மண் சட்டிகள் சில கிணற்றுக்குள் இறக்கி அதில்

அரியாலை துப்பாக்கி சூடு: விசேட அதிரடிப்படை முகாமில் சிக்கிய ஆதாரம்!!

Posted by - November 1, 2017

யாழ்.அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் பகுதியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை  மேற்கொண்ட விசேட அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீடடுள்ளனர். யாழ்.பண்ணை வீதியில் உள்ள விசேட அதிரடிப் படை முகாமில் இருந்தே நேற்று இரவு (31.10) மீட்டுள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன்

கைக்குண்டொன்று நந்தாவிலில் மீட்பு

Posted by - November 1, 2017

யாழ்ப்பாணம், கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து நேற்று வெடிக்கக்கூடிய நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸாரின் 119 அவசர அழைப்புக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நீதிமன்றின் அனுமதியைப் பெற்ற பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் அந்தக் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்தனர்.

வடகொரியா அணுவாயுத சோதனை தள சுரங்கம் இடிந்து சேதம்

Posted by - November 1, 2017

வடகொரியாவின் அணுவாயுத சோதனைத் தளத்தில் உள்ள சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானிய ஊடகமான அசாஹி என்ற தொலைக்காட்சி இதனைத் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் 6வது அணுவாயுத சோதனையை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி இந்த சுரங்கம் இடிந்து வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதன்போது குறித்த சுரங்கத்தில் பணியாளர்களாக இருந்த நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஜப்பானிய தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி இந்த