கைக்குண்டொன்று நந்தாவிலில் மீட்பு

327 0
யாழ்ப்பாணம், கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து நேற்று வெடிக்கக்கூடிய நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸாரின் 119 அவசர அழைப்புக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நீதிமன்றின் அனுமதியைப் பெற்ற பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் அந்தக் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்தனர்.

Leave a comment