அரசி, பருப்பு விலைகள் இன்று நள்ளிரவுமுதல் குறைப்பு

Posted by - November 1, 2017

இன்று நள்ளிரவு முதல் லங்கா சதொசவில் பொன்னி சம்பா மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக கைத்தொழி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பா அரிசி ஒரு கிலோ 80 ரூபாயிலிருந்து 78 ரூபவாகவும், பருப்பு ஒரு கிலோ 152 ரூபாயிலிருந்து 148 ரூபவாகவும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீசா அனுமதி தொடர்பில் இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - November 1, 2017

இராஜதந்திர, விசேட மற்றும் கடமைகளுக்கான கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜைகளுக்கு வீசா அனுமதியை பெற்று கொள்வதில் இருந்து விடுவிப்தற்காக இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அரசாங்க தகவல்திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார். இலங்கைக்கும் கட்டார் அரசாங்கத்திற்கும் இடையில் நிலவி வரும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் 2 நாடுகளுக்கும் விஜயம் செய்யும் இராஜதந்திரிகள், விசேட

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து பலம் சேர்ப்பது அனைவரது தார்மீக கடமையாகும்! -அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 1, 2017

தம் சார்ந்த சமூதாய நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ். பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவளிப்பது பல்கலைக் கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவரது தார்மீக கடமையாகும். மாணவர்கள் மேற்கொண்டு வரும் இப்போராட்டமானது பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம் அல்ல என்பதையும் தம் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையில் நடாத்தப்பட்டு வருகிறதென்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.வகுப்புகளை புறக்கணித்து அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வந்த மாணவர்களை பல்கலைக் கழகத்திற்கு பூட்டுப் போட்டு முடக்கும் நிலைக்கு தள்ளியது

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

Posted by - November 1, 2017

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நாடு பூராகவும் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு இதன்போது கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய பிரச்சினை மற்றும் 2014.01.03 ஆம் திகதி முதல் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கேற்ப சம்பளத்தினை குறைக்காது நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பாகவும் இதன்போது

அனைத்து ஒசுசல மருந்தகங்களிலும் இலவசமாக மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை

Posted by - November 1, 2017

அரச மருந்தாளர்கள் சங்கம் இன்று முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். 

கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்

Posted by - November 1, 2017

அம்பாறை முழங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இங்குரானையைச் சேர்ந்த இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அம்பாறை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அம்பாறை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை பொலிசர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன் பெரல்கள் மற்றும் கசிப்பு வடிப்பதற்கான உபகரணங்களையும் பொலிஸார் மீட்டனர் . இதனையடுத்து அம்பாறை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில்  நீதிவான்

பாகிஸ்தான் தம்பதிகள் கைது

Posted by - November 1, 2017

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் தொகையொன்றுடன் பாகிஸ்தான் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதிகள் இன்று அதிகாலை 4.40 அளவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்துள்ளனர். அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்து அவதானித்த, வானூர்தி நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், அவர்களின் பயணப் பொதியை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது, குறித்த பயணப் பொதியிலிருந்து 2 கிலோ 766 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்; தெரிவித்துள்ளார்.

உரிய மொழிபெயர்ப்பு குறித்து ஆராய வேண்டும்- ஜயம்பதி விக்கிரமரட்ன

Posted by - November 1, 2017

ஏக்கிய ராஜ்ய என்ற சிங்கள பததிற்கு ஒருமித்த நாடு என்ற தமிழ் பதத்தின் மொழி பெயர்ப்பு சரியானதாக இல்லாவிட்டால், உரிய மொழிபெயர்ப்பு குறித்து ஆராய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாத்தில் உரையாற்றியபோது, நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். ஏக்கிய ராஜ்ய என்ற பதம் இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. பிளவுபடாத – பிரிக்க முடியாத என்பதே ஏக்கிய ராஜய மற்றும் ஒருமித்த