ஒருகொடவத்தை களஞ்சியசாலையொன்றில் தீ

Posted by - December 31, 2017

ஒருகொடவத்தை மேம்பாலத்துக்கு அருகிலுள்ள கார்ட் போர்ட், ரெஜிபோம் களஞ்சியசாலையொன்று   தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயணைப்பு நடவடிக்கையில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த தீயினால் அருகிலுள்ள வீடொன்றும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருதானையில் புகையிரத பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Posted by - December 31, 2017

மருதானை தொழில்நுட்ப சந்தியில் அமைந்திருக்கும் புகையிரத தலைமையகத்தில் புகையிரத பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் லசித் மாலிங்க

Posted by - December 31, 2017

2019ம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார். 

தேர்தலுடன் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 53 இதுவரை கிடைத்துள்ளது!

Posted by - December 31, 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 53 இதுவரை கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சிதைந்த நாணய தாள்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நீடிப்பு

Posted by - December 31, 2017

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இலங்கை மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் காலத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை குரான் புத்தகங்கள்!

Posted by - December 31, 2017

தேர்தல் காலத்தில் விநியோகிக்க கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 625 அல் குரான் புத்தகங்கள் கல்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இம்முறை கல்பிட்டி பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் ஒருவரின் வீட்டில் இருந்தே இவை கிடைக்கப் பெற்றுள்ளன. நேற்று 30ம் திகதி இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கல்பிட்டி – முதலப்பாளி பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரே சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தளம் மாவட்ட செயலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தேர்தல் காரியாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்புக்கள்

2017 – ஆண்டு கண்ணோட்டம்

Posted by - December 31, 2017

அமெரிக்கா – வடகொரியா பிரச்சனை, ஐ.எஸ் வீழ்ச்சி, ரோகிங்கியா அகதிகளின் சோக கதை என இந்த ஆண்டில் நடந்த சில முக்கிய உலக நிகழ்வுகளை காணலாம்.

அமெரிக்காவில் வாகன பழுது நீக்கும் மையத்தில் 2 பேர் சுட்டுக்கொலை

Posted by - December 31, 2017

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகன பழுது நீக்கும் மையத்தில் தொழிலாளர்கள் 2 பேர் சுட்டுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு ரூ.1,657 கோடி நிதியை நிரந்தரமாக நிறுத்திவைக்க அமெரிக்கா முடிவு?

Posted by - December 31, 2017

பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் மெத்தனமாக செயல்படுவதால் அந்நாட்டுக்கு வழங்க திட்டமிட்டு இருந்த நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வணிக வளாக குண்டு வெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது

Posted by - December 31, 2017

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வணிக வளாக குண்டு வெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.