வவுனியா மேல் நீதிமன்றத்தினால் மூவருக்கு மரணதண்டனை
வவுனியாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 19ம் திகதி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் துவான் என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இந்த தீர்ப்பை அளித்துள்ளார். இதற்கமைய, செட்டிகுளத்தை சேர்ந்த ரவீந்திர ஜோதி, நேசராசா மற்றும் குமார் ஆகிய மூவரே குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுள்ளது. இதேவேளை, வழக்குடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் தவிர்த்து ஏனைய

