சிரிய கார் குண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு

Posted by - November 6, 2017

சிரியாவில் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளது. சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை அழிப்பதில் உலக நாடுகள் சிரியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிரியாவின் கிழக்கு டேர் எஸ்ஸர்

டெக்சாஸில் துப்பாக்கி சூடு – 26 பேர் பலி

Posted by - November 6, 2017

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 26க்கும் அதிகமானவர்கள் பலியானதாக அந்த நாட்டு பாதுகாப்பு துறையை மேற்கோள் காட்டி சர்வதேச தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் டெக்ஸாஸிலுள்ள சிறு நகரொன்றில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் 30 க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவாலயத்தினுள் நுழைந்த துப்பாக்கிதாரியொருவர், தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் காவல்துறையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் வளத்துறை அமைச்சின் பகீர் அறிவிப்பு

Posted by - November 6, 2017

நாளாந்த தேவையை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் 4 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் உபாளி மாரசிங்க இதனை தெரிவித்தார். நாடு முழுவதிலும் குறையின்றி எரிபொருள் விநியோக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில், தேவைக்கு அதிகமாக பெற்றோலை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார். இதேவேளை, ஐஓசி நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் தரமற்றதாக காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சின் செயலாளர், எந்த காரணத்திற்காகவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாதென

மஹிந்தவை எப்போது ஞாபகம் வரும்

Posted by - November 6, 2017

அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், எதிர்கட்சியில் இருக்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பது தேர்தல் காலங்களில் மாத்திரமே என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் கூறுகின்றனர். எனினும், தேர்தல் ஒன்று வருகின்ற போதே மகிந்த ராஜபக்ஸவும் ஒன்றிணைந்த எதிர்கட்சியும் அவர்களுக்கு

சைட்டம் பிரச்சினை – இன்று நாடுதழுவிய சத்தியாகிரக போராட்டம்?

Posted by - November 6, 2017

சைட்டம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வராதபட்சத்தில், இன்றைய தினம் நாடுதழுவிய சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ கற்கையை முற்று முழுதாக அகற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முன்னாள் நிதி அமைச்சர் மேற்கொண்ட மோசடிகளை மீண்டும் செய்ய வேண்டாம் – மஹிந்த அணி கோரிக்கை

Posted by - November 6, 2017

அடுத்த ஆண்டிற்கான உத்தேச பாதீட்டில் முன்னாள் நிதி அமைச்சர் மேற்கொண்ட மோசடிகளை செய்ய வேண்டாம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த கோரிக்கையை முன்வைத்தார். புதிய ஆண்டுக்கான பாதீட்டு யோசனை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மக்களின் வாழ்வாதார செலவீனங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ளது. முன்னாள் நிதியமைச்சரே இந்த விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமானவர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய

தமிழரசு கட்சியில் இணைந்துகொள்வதற்காக மக்கள் சண்டை – சுமந்திரன்

Posted by - November 6, 2017

தமிழரசு கட்சியில் இணைந்துகொள்வதற்காக மக்கள் சண்டையிட்டுக் கொள்வதை ஆரோக்கியமாக கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு மூலக்கிளை தெரிவுசெய்கின்ற கூட்டம் நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார். சுமந்திரன்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி இலங்கை விஜயம்

Posted by - November 6, 2017

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்  அரசியல் விடயங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் தோமஸ் ஏ செனன் இன்று இலங்கை வருகிறார். தற்போது பங்களாதேஷிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். அவர், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இடம்பெற்றுவரும் இருதரப்பு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அமெரிக்க குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார். அத்துடன், அரச மற்றும் தனியார் அரசசார்பற்ற பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் அரசியல் அமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து கணிப்பு

Posted by - November 6, 2017

இலங்கையின் அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களின் கருத்துக்களை அறிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பான ஐந்து நாள் விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெவுற்றது. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் ஊடாக இணையத்தளங்கள் மற்றும் முகப்புத்தம் ஊடாக இவ்வாறு மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன. இணையத்தளங்கள் மற்றும் முகப்புத்தகம் ஊடாக ‘வலை கருத்து’ ஊடாக இலங்கை மற்றும் வெளிநாடுகளின் வசிக்கும் இலங்கையர்கள், புதிய

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொதுமக்களுக்கு முக்கியமானது – ஜே.வி.பி

Posted by - November 6, 2017

எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் பொது மக்களுக்கான ஒரு முக்கிய தேர்தல் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இதனை தெரிவித்துள்ளார். இந்த தேர்தலை மக்கள் கருத்துக் கணிப்பு தேர்தலாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பாக மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ஊழல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துநெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.