எரிபொருள் வளத்துறை அமைச்சின் பகீர் அறிவிப்பு

19488 0

நாளாந்த தேவையை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் 4 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் உபாளி மாரசிங்க இதனை தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் குறையின்றி எரிபொருள் விநியோக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், தேவைக்கு அதிகமாக பெற்றோலை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, ஐஓசி நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் தரமற்றதாக காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சின் செயலாளர், எந்த காரணத்திற்காகவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாதென குறிப்பிட்டார்.

இதேவேளை, எரிபொருள் முகாமை தொடர்பில் அரசாங்கத்திற்கு தெளிவான நடைமுறையொன்றின் தேவை உணரப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கட் விளையாட்டின் வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவிப்பதை விடுத்து பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a comment