மஹிந்தவை எப்போது ஞாபகம் வரும்

447 0

அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், எதிர்கட்சியில் இருக்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பது தேர்தல் காலங்களில் மாத்திரமே என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் கூறுகின்றனர்.

எனினும், தேர்தல் ஒன்று வருகின்ற போதே மகிந்த ராஜபக்ஸவும் ஒன்றிணைந்த எதிர்கட்சியும் அவர்களுக்கு ஞாபகத்தில் வரும்.

சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றாலும், சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே உள்ளுராட்சி மன்றங்களை நிறுவுவார்கள்.

இந்த வெற்றியினை பயன்படுத்து அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் முயற்சிப்பார்கள் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment