எரி­பொருள் விநி­யோக குள­று­ப­டிக்கு இந்­தி­யாவை குறை கூறு­வதில் பய­னில்லை-மனோ கணேசன்

Posted by - November 8, 2017

நாட்டில் இன்று ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் நெருக்­க­டிக்கு, பொது எதி­ர­ணி­யினர், இந்­தி­யாவை குறை கூறு­வது, தும்பை விட்டு வாலை பிடிப்­பது போன்­ற­தாகும். இதை­விட பொது எதி­ரணி தலைவர், தன் வழ­மை­யான திருப்­பதி யாத்­தி­ரையின் போது இது­பற்றி இந்­திய கட­வு­ளிடம் முறை­யீடு செய்­யலாம். எரிபொருள் உண்­மையில், எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும், 21 நாட்­க­ளுக்கு தேவை­யான எரி­பொ­ருளை எப்­போதும் சேமித்து வைத்­தி­ருக்கும் வழ­மையை இம்­முறை கடை­ப்பி­டிக்க தவ­றி­ய­மையே, இன்­றைய சிக்­க­லுக்கு பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ளது. நாட்டின் அதி­க­மான தனியார், பொது வாக­னங்கள்

அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்­வில்லை?

Posted by - November 8, 2017

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நாளை 9ஆம் திகதி முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள  நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு –செல­வுத்­திட்­டத்தின் ஊடாக  அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு  இருக்­காது என்றும் வாக­னங்­களின் விலை­களில் மாற்றம் வரும் என்றும்  நிதி­ய­மைச்சு வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது. மேலும் வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களில் முத­லீடு செய்­வோ­ருக்கு 200வீத வரிச்­ச­லு­கையை தொடர்ந்தும் உயர்ந்த மட்­டத்தில் முன்­னெ­டுப்­ப­தற்கும் மலை­க­யத்தில் வீட­மைப்பு வேலைத்­திட்­டத்தை துரி­தப்­ப­டுத்­தவும் அடுத்த வரு­டத்­திற்­கான வரவு, செல­வுத்­திட்­டத்தில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான  நல்­லாட்சி 

போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்தவர் கைது

Posted by - November 8, 2017

சட்டவிரோதமாக போலி மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட, ஒருவர் கொடவில பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். 38 வயதான இவர் வசம் இருந்து, போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில், சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வேலை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இவரை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

20,000 மெற்றிக்தொன் அரிசி வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

Posted by - November 8, 2017

இறக்குமதி செய்யப்பட்ட, சுமார் 136 கோடி ரூபா பெறுமதியுடைய, 20,000 மெற்றிக்தொன் அரிசி வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

வௌிநாட்டு தொலைக்காட்சி நாடகத் தொடர் மீதான வரி அதிகரிப்பு

Posted by - November 8, 2017

வௌிநாட்டு தயாரிப்பு தொலைக்காட்சி நாடகத் தொடர் மற்றும் திரைப்படங்களுக்கு இதுவரை அறவிடப்பட்டு வந்த வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு கூறியுள்ளது. 

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட பெருந்தொகை மிதிவெடிகள் மீட்பு!

Posted by - November 8, 2017

முல்லைத்தீவு – முல்லிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து 50 மிதிவெடிகள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மேல் மாகாணத்தில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது!

Posted by - November 8, 2017

வரும்காலங்களில் மேல் மாகாணத்தில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

இடது கை வெட்டப்பட்ட நிலையில் பெண ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - November 8, 2017

பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் 03ம் இலக்க லயன் குடியிருப்பில் இருந்து வெட்டு காயங்களுடன் வயோதிப பெண் ஒருவரின் சடலம் ஒன்று 08.11.2017. புதன் கிழமை காலை 07மணி அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

பொது போராட்டங்கள் பற்றிய சிறந்த பாடத்தை ஒக்டோபர் புரட்சி கற்றுக்கொடுத்துள்ளது – மைத்ரிபால சிறிசேன

Posted by - November 8, 2017

பொது போராட்டங்கள் பற்றிய சிறந்த பாடத்தை ஒக்டோபர் புரட்சி கற்றுக்கொடுத்துள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார். ஒக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை கொமியுனிஸ்ட் கட்சியினால் நேற்று (07) பிற்பகல் தாமரைத் தடாகக் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அரச ஆட்சிக்கு எதிராக 1917 ஆம் அண்டு லெனின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒக்டோபர் புரட்சியின் வெற்றியானது, சோவியத் ஒன்றியத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மானிடர்களும் பெற்றுக்கொண்ட வரலாற்று ரீதியான

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரக ஊழியர் சுட்டுக் கொலை

Posted by - November 8, 2017

ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர் நய்யார் இக்பால்ரானா ஜலாலாபாத்தில் ஒரு கடையில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.