முல்லைத்தீவில் மீட்கப்பட்ட பெருந்தொகை மிதிவெடிகள் மீட்பு!

4795 8

முல்லைத்தீவு – முல்லிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து 50 மிதிவெடிகள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மண்னைத் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உரப்பை ஒன்றில் இவை இருந்துள்ளன.

இதனையடுத்து, பொலிஸாருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், குறித்த மிதிவெடிகளை மீட்டுள்ளதோடு, அவற்றை செயழிழக்கச் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவை, கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என, பொலிஸாரால் சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment