மதுசூதனன் தோல்விக்கு ஜெயக்குமார்தான் காரணம்: புகழேந்தி

Posted by - December 26, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு காரணமே அமைச்சர் ஜெயக்குமார்தான் என டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

சுனாமி நினைவு தினம்: கடலூர் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

Posted by - December 26, 2017

சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினத்தில் இன்று நடந்தது. பின்னர் சுனாமியில் பலியான உறவினர்களுக்கு கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

அரசாங்கத்தை வீழ்த்த தலைமை தாங்கத் தயார்.!- ராஜபக் ஷ

Posted by - December 26, 2017

ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக் கப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள்  செல்வாக்கு உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அரசியல் அமைப்பின் மூலம் நாட்டினை துண்டாடும் முயற்சிகள் முன்னெடுக்கப்ப டுகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.  இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் போராட் டத்தில் தலைமை தாங்க  நாம்  தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு நேற்று ஹோமாகமை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில்

சி.பா ஆதித்தனார் கொண்டு ஊடக எழுத்து நடை பாட திட்டத்தில் இடம்பெறும்: செங்கோட்டையன்

Posted by - December 26, 2017

ஊடக தமிழில் சி.பா ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்து நடை பள்ளி பாடதிட்டத்தில் இடம் பெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் நீக்க முடியாது: சி.ஆர்.சரஸ்வதி

Posted by - December 26, 2017

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் நீக்க முடியாது என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நடிகை சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

இலங்­கையில் பாம்­புக்­க­டி­யினால் 400 பேர் மரணம்- களனிப் பல்­க­லைக்­க­ழகம்

Posted by - December 26, 2017

இலங்­கையில் ஆண்­டு­தோறும் 80000 பேர் பாம்­புக்­க­டிக்கு உள்­ளா­வ­தா­கவும் இவர்­களில் 400 பேர் மர­ணிப்­ப­தா­கவும் களனிப் பல்­க­லைக்­க­ழக ஆய்­வொன்று குறிப்­பி­டு­கின்­றது. களனிப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஜானக டி சில்வா, சிரேஷ்ட பேரா­சி­ரியர் மருத்­து­வ­பீட டாக்டர் அனு­ரா­தானி, கஸ்­தூ­ரி­ரட்ண சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர், தலைவர் பொது சுகா­தா­ரத்­துறையினர் ஆகி­யோரைக் கொண்ட குழு இவ்­வாய்வை மேற்­கொண்டு இத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளது. நாடு பூரா­கவும் உள்ள மருத்­து­வ­மனை அறிக்­கைகள், பாம்­புக்­கடி பற்­றிய தேசிய வீட்டு வசதி ஆய்வு ஆகி­ய­வற்றில் இருந்தே இவ்­வாய்­வா­ளர்கள் தகவல்

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!!

Posted by - December 26, 2017

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2017 இன்றுடன் 13 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர். ஹட்டன் நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில்  ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற

சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி

Posted by - December 26, 2017

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 13 ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அக் கிராமக்களின் ஏற்பாட்டில் கிராமத்தலைவர் சற்குணம் தலைமையில் இன்று  நடைபெற்றது.இந் நிகழ்வானது இக்கிராமத்தில் இருந்து உயிர் நீத்த 44 உறவுகளின் நினைவாக கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மதகுருமார், பொதுமக்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர், சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கங்கள் அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகள் என

ரயிலில் மோதுண்டு பலியானவரின் சடலம் இரண்டு துண்டங்களாக மீட்பு!!

Posted by - December 26, 2017

அவிஸ்ஸாவெலை உக்குவத்தை பிரதேசத்தில் இன்று காலை 6 மணியளவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். ரயிலில் மோதுண்டவரின் சடலம் இரண்டு துண்டங்களான நிலையில் பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிஸ்ஸாவெலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த சம்பவம் தற்கொலையா விபத்தா விபத்தில் உயிரிழந்தவர் யார் என அடையாளம் தெரியாத நிலையில் அவிஸ்ஸாவெலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மலேசியப் பிரதமர் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

Posted by - December 26, 2017

இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது வட மாகாண முதலமைச்சரைச் சந்திப்பதாக கூறப்பட்டிருக்க வில்லை. இருப்பினும், வடக்கு முதலமைச்சர் மலேசியப் பிரதமரைச் சந்திக்க அவகாசம் வழங்குமாறு கோரியிருந்துள்ளார். விக்னேஸ்வரன் வடக்கை தனியான ஒரு நாடாக கருத்தில் கொண்டு, அரச தலைவர்களை தனியாக சந்திக்க அனுமதி கோருவது சட்ட்விரோதமானது என அரசாங்க உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.