ரயிலுடன் மோதுண்டு நபரொருவர் பலி!

Posted by - November 12, 2017

ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபச் சாவு மீசாலையில் இன்று பிற்பகல் சம்பவம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த கடுகதி ரயிலிடன் மோதுண்டு ஒருவர் உயிழிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் மீசாலையில் இடம்பெற்றது. ரயில் வருவதை அவதானிக்காத அவர், மோட்டார் சைக்கிளில் கடவையைக் கடக்க முற்பட்ட போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தைச் சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.

போதையேறும் மருந்து வகையொன்றை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது

Posted by - November 12, 2017

வைத்தியர் அனுமதியின்றி போதையேறும் மாத்திரை வகையொன்றை விற்பனை செய்த மருந்தகமொன்று (பாமஷி ) தலவாக்கலை நகரில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, நேற்று மாலை தலவாக்கலை அதிரடிப்படையினரும் நுவரெலியா உணவு ஔடத பரிசோதர்களும் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , குறித்த மருந்து வகை அப் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்

புத்தர்சிலை பதிக்கப்பட்ட பட்டாசுகள் மீட்பு

Posted by - November 12, 2017

வெல்லவாய, புதுருவாகல பிரதேசத்தில் புத்தரின் உருவச் சிலை பதிக்கப்பட்ட ஒரு தொகை பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பிரதேசவாசியொருவரினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட பட்டாசு பெட்டியொன்றில் இந்த புத்தச் சிலை பதிக்கப்பட்ட பட்டாசுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளுராட்சி தேர்தல்: கருத்துக்கணிப்பாகுமா?

Posted by - November 12, 2017

மூன்று விடயங்கள் இன்றைய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம், புதிய அரசியலமைப்பின் ஊடான அரசியல் தீர்வுக்கான விவாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவதற்காகத் திகதி குறிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகிய மூன்றுமே அந்த முக்கிய விடயங்களாகும்.

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி!

Posted by - November 12, 2017

எதிர்வரும் 27ம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது. 

வடகிழக்கு இணையாவிட்டால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே

Posted by - November 12, 2017

வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது. வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போகும் நிலையேற்படும். இதனால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே இவ்வாறானதோர் நிலைக்கு  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவே காராணமாக அமைவார் என கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா  வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே

கூட்டுறவு சங்க கிளை உடைத்து கொள்ளை : நால்வர் கைது.!

Posted by - November 12, 2017

வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையின் கதவின் பூட்டினை உடைத்து உட்சென்ற திருடர்கள் அங்கிருந்து உலர் உணவு பொருட்கள், மீள்நிரப்பு அட்டை மற்றும் பணத்தினை எடுத்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் கல்மடு வீதியின் ஊடாக தப்பித்துச்சென்றுள்ளனர்.இவ்வாறு சென்ற முச்சக்கரவண்டியினை அதிகாலை 2.00 மணியளவில் கல்மடு கட்டடையர்குளத்தில் ரோந்து கடமையில்

துப்பாக்கி முனையில் இளைஞன் கடத்தல் முயற்சி : வவுனியாவில் சம்பவம்

Posted by - November 12, 2017

வவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 5.45 மணியளவில் இளைஞனொருவன் துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்த சம்பவம் பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வாகனத்தில் பயணித்த வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த கஜேந்திரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பொன்னுத்துரை அரவிந்தன் ஆகியவர்களை இரு சொகுசு வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் வழிமறித்து தங்களது வாகனத்தில் ஏறுமாறு தெரிவித்துள்ளனர்.

கட்சியின் தலைமை, செயலாளர் பதவி வேண்டும்- கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனை

Posted by - November 12, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி ஒன்றுசேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும், செயலாளர் பதவியையும் கூட்டு எதிர்க் கட்சிக்கு வழங்க வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியில் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் இருவருக்கு குறித்த பதவிகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது