பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல் – புறுக்சால், யேர்மனி

Posted by - November 13, 2017

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல புறுக்சால்-உண்ரகுறும்பாக் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் சுடர்வணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்க நிகழ்வுகளாக நினைவுரை எழுச்சிநடனங்கள் கவியரங்கு என்பவை இடம்பெற்றதோடு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற நம்பிக்கையுணர்வுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தமிழீழ மக்களின் உறுதியுரையோடு நிறைவுற்றது.

அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம்! மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும்! – மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 13, 2017

எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும் என்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டுப் போராடிவரும் அவர்களது உறவுகளைச் சந்தித்த போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் இவ்வாறு கூறியிருந்தார். இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டடும், கைதுசெய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்ற

மோடி- ட்ரம்ப் பிலிப்பைன்ஸில் சந்தித்து பேச்சு

Posted by - November 13, 2017

ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். வியட்நாமில் சமீபத்தில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அந்நாடு பிரமாண்ட வளர்ச்சி கண்டு வருகிறது. பிரதமர் மோடி நாட்டு மக்களை ஒருங்கிணைத்து வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்கிறார்” எனக் கூறினார். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், தென் கிழக்கு ஆசிய நாடுகள்

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பிரதமர் மோடி: இந்திய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

Posted by - November 13, 2017

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக பிலிப்பைன்ஸ் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார். அங்கு பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை சந்தித்து பேசினார். தென் இந்தியாவை போலவே, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியநாடுகளிலும் அரிசி முக்கிய உணவாக உள்ளது. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லாஸ் பனோஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான இந்திய விஞ்ஞானிகளும் பணியாற்றி வருகின்றனர்.

ஆசியான் மாநாட்டில் கைகுலுக்க மறந்த ட்ரம்ப்: அதிர்ந்து போன தலைவர்கள்

Posted by - November 13, 2017

ஆசியான் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மற்ற நாடுகளின் தலைவர்களுடன் உரிய முறையில் கைகுலுக்க மறந்ததால் மற்றவர்களுக்கு தர்மசங்டம் ஏற்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடுகள் இணைந்துள்ள ஆசியான் அமைப்பின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதனுடன் ஆசியான் அமைப்பின் 50-ம் ஆண்டு விழா, கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆசியான் நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின்

பாஜகவின் 3 எம்எல்ஏக்கள் நியமனம் நிராகரிப்பு: புதுச்சேரி சபாநாயகர் உத்தரவு

Posted by - November 13, 2017

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களாக பாஜகவினர் மூவர் நியமனத்தை நிராகரித்து சபாநாயகர் வைத்திலிங்கம் இன்று உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ளலாம். இதுவரை மாநில அரசு பரிந்துரை செய்பவர்களையே மத்திய அரசு நியமித்து வந்தது. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசு பரிந்துரைக்காமலேயே பாஜகவினர் மூன்றுபேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துள்ளது. சபாநாயகர் வைத்திலிங்கம் இருக்கும்போது அவர்களுக்கு ஆளுநர் கிரண்பேடியே ராஜ்நிவாஸ் கதவுகளை மூடி, ரகசியமாக பதவிப்பிரமாணமும்

ஜெயலலிதா மரணம்; பிரதமர் அலுவலகம் வரை விசாரணை தேவை: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

Posted by - November 13, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று தஞ்சாவூரில் கூறியது: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்குச் செல்லாததால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் ஊழல் இருந்தது. அப்போதே, மத்திய அரசு சோதனை நடத்திஇருந்தால் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியிருக்கலாம். அவர், இறந்த பிறகு அதிமுகவில் விரிசல் ஏற்படும் முன்பே சோதனை நடத்தியிருந்தாலும் ஆவணங்கள் சிக்கி இருக்கும். வருமான வரி சோதனை ஒருதலைப்பட்சமாக

ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு கானல் நீராகும்: நெல்லை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் உறுதி

Posted by - November 13, 2017

அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவு, கானல் நீராகும் என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். அரசு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ரூ.734 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து பிறழாமல் கட்சியையும், ஆட்சியையும் நடத்துகிறோம். எங்களை தலைவர்களாக நினைக்கவில்லை, தொண்டர்களாக இருந்தே பணியாற்றுகிறோம். அதிமுக 100 ஆண்டுகள் கடந்தும் இருக்கும் என்ற ஜெயலலிதாவின்

அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Posted by - November 13, 2017

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மழைக்கால பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆய்வு கூட்டம் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே,சத்யகோபால். மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.நூர் முகமது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வை,ஜெயகுமார், சார் ஆட்சியர்கள் செங்கல்பட்டு வீ.ப.ஜெயசீலன், மதுராந்தகம் கிள்ளி சந்திரசேகர்,

சசிகலா வழக்கறிஞர் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள்

Posted by - November 13, 2017

சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டில் கடந்த 3 தினங்களாக நடத்திய சோதனை நேற்று முன்தினம் இரவு முடிந்தது. வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துச் சென்றனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மோகனூர் சாலை கூட்டுறவு காலனி வீதியில் சசிகலா வழக்கறிஞர் எஸ்.செந்தில் வீடு உள்ளது. அவரது வீட்டில் கடந்த 9-ம் தேதி