கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மாவனல்லை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 14, 2017

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மாவனல்லை, கனேதன்ன பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுவருவதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனேதன்ன – கம்பளை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேள்விக்கான தடையை ஆட்சேபித்து மேன்முறையீடு!

Posted by - November 14, 2017

வேள்விக்கான தடையை ஆட்சேபித்து மேன்முறையீடு  கவுணாவத்தை ஆலயம் மேன்முறையீட்டு நீதிமன்று செல்கிறது ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனு மற்றும் அறிவிப்பை சட்டத்தரணி வீ.கௌதமன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார். ‘யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச்  சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும்

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டு!

Posted by - November 14, 2017

கோப்பாய் இருபாலை வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு விட்டு உந்துருளியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தில் கோப்பாயைச் சேர்ந்த.  என்பவரே இரு கையிலும் படுகாயமடைந்த நிலையில் வீழ்ந்தவேளையில் தாக்குதல்தாரிகள் உந்துருளியை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தின்போது யாழில் இருந்து பயணித்தவரை பின்னால் உந்துருளியில் பயணித்தவர்களே குறித்த வாழ்வெட்டினை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில்

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - November 14, 2017

சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. எனினும் இந்த விடயம் தொடர்பில் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாததன் காரணத்தினால், அரசாங்கத்திற்கு தொடர்சியான அழுத்தங்களை கொடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து காலை

வடக்கு மீள்குடியேற்றம்;நோர்வேயும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனமும் ஒன்றிணைந்து உதவி

Posted by - November 14, 2017

வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நோர்வேயும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனமும் ஒன்றிணைந்து உதவியளிக்கவுள்ளன. இதற்கான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நோர்வையின் உயர்ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனத்தினது இலங்கை பணிப்பாளரும் கைச்சாத்திட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் நோக்கில் இரண்டு தரப்பும் இணைந்து செயற்படவுள்ளன. மீள்குடியேறியவர்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் இதன்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

நியுசிலாந்து நோக்கி பயணித்த நான்கு அகதிகள் படகுகள் இடைமறிப்பு

Posted by - November 14, 2017

நியுசிலாந்து நோக்கி பயணித்த அகதிகளின் படகு நான்கினை, அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நியுசிலாந்தின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. குறித்த படகுகளில் 164 அகதிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்ற போதும், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நிறைவேற்றுப் பிரதமர் பதவி உருவாக்கப்படாது – பிரதி அமைச்சர் அஜித்

Posted by - November 14, 2017

நாட்டில் நிறைவேற்று பிரதமர் பதவி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது என்று, பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு நாட்டுக்கு அவசியம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். புதிய யாப்பில் ஒற்றையாட்சிக்கு பங்கம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறவில்லை. ஏதோ காரணத்துக்காக புதிய யாப்பு, மக்கள் கருத்துக் கணிப்பில் தோல்வி அடைந்தால், மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல் இடம்பெறும். இதன்போது பிரதமரை சக்திமயப்படுத்தும்

அமெரிக்கா – வடகொரியா மோதல்: 3-ம் உலகப்போர் மூள 51% வாய்ப்புள்ளது – அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் கருத்து

Posted by - November 14, 2017

அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் போக்கு நீடிப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பானை அணு குண்டுகளை வீசி அழித்துவிடுவோம் என்று அந்த நாட்டு

கொடூர சித்திரவதைகளுக்குள்ளான தமிழ் இளைஞர்கள்: சர்வதேச ஊடகம் வெளியிட்ட பதறவைக்கும் புகைப்படங்கள்

Posted by - November 14, 2017

மைத்திரி அரசின் ஆட்சியிலும் தமிழர்கள்    மீதான சித்திரவதைகள் தொடர்வதாக சமீபத்தில் சர்வதேச ஊடகம் ஒன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது.வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ள இலங்கை தமிழர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.வெளியான செய்தியைத் தொடர்ந்து, இச்சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள வடுக்களையும், காயங்களையும் ஏபி செய்தி நிறுவனம் தற்போது புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.இதேவேளை, இலங்கையில்

16 மாணவர்கள் திடீர் சுகயீனம்

Posted by - November 14, 2017

சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொனராகலை – பல்லேவலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 16 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.