ஏறாவூரில் குண்டு மீட்பு

Posted by - January 2, 2017

மட்டக்களப்பு – ஏறாவூர் – செங்கலடி – எல்லைநகர் பகுதியில் கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள சிறிய வீட்டுத் தோட்டத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த கைக்குண்டு தென்பட்டுள்ளது. இதனை அடுத்து காவற்துறைக்கு தகவல் வழங்கப்பட்டு குண்டு மீட்கப்பட்டுள்ளது. குண்டு தற்போது செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓமந்தையில் தாயும் மனனும் சடலங்களாக மீட்பு

Posted by - January 2, 2017

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்தனர். வவுனியா – ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டின் கிணற்றில் இருந்து இவ்வாறு 30 வயதான தாயும் 7 வயதான மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வெளியே சென்றிருந்த வீட்டார், வீடு திரும்பிய போது, வீட்டில் எவரும் இல்லாத நிலையில், அவர்களை தேடியவேளை, கிணற்றில் அவர்கள் சடலங்களாக இருப்பதை அவதானித்து காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த

காணிகளுக்காக போராட வேண்டும் – மஹிந்த

Posted by - January 2, 2017

பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தொட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணி சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது. வேறு பல பகுதிகளிலும் பல நாடுகளுக்கு காணிகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு பொதுமக்களது காணிகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவதால், இலங்கைக்கு எதுவும் மிஞ்சாமல் போகிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் நாட்டு மக்களின் காணிகளை பாதுகாப்பதற்காக வெளிநாட்டவர்களுடன் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் இன்றி அபிவிருத்தி இல்லை – ஜனாதிபதி

Posted by - January 2, 2017

தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமல், நிலையான அபிவிருத்தியின் பலனை அடைய முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிலையான அபிவிருத்தி யுகத்துக்கான நிகழ்வில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டினதும், சமுகத்தினதும் அபிவிருத்திக்கான இலக்கு அடையப்பட வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பதும், ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் அதிகாரத்தை பிடிப்பதற்கு முயற்சிப்பதும் தற்போது நாட்டுக்கு அவசியம் இல்லை. தற்போது நாட்டின் அபிவிருத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்து கலந்துரையாடல்

Posted by - January 2, 2017

எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சகல கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதனை உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரதேச எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவினால், இறுதி செய்யப்பட்ட அறிக்கையை பொறுப்பேற்க மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா மறுப்பு தெரிவித்துள்ளார். குறித்த ஆணைக்குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ்

விபத்தில் ஒருவர் பலி – 9 பேர் காயம்

Posted by - January 2, 2017

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கேகாலை – மொடகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியானவர் குறித்த பாரவூர்தியின் சாரதி என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனார்.

ஜாலியவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 2, 2017

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அலுவலக நிர்மாணிப் பணிகளுக்கான ஒப்பந்த வழங்களுக்காக 2லட்சத்து 50 ஆயிரம் டொலர்கள் கையூட்டல் பெற்றதாக தெரிவித்து அவர் கடந்த நொவம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 11ஆம் திகதி தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்திய கிரிக்கட் சபையின் தலைவர், செயலாளரை பதவி விலக உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 2, 2017

இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் அனுரக் தாகூர் மற்றும் செயலாளர் அஜே சிரேக் ஆகியோர் பதவி விலகுமாறு இந்திய உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. லோதா ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2013 ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு, இந்திய கிரிக்கட் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. எனினும் இந்த பரிந்துரைகளை இந்திய கிரிக்கட் சபை

கிளிநொச்சி பொன்னகர் மத்தி கிராமத்தில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர் (காணொளி)

Posted by - January 2, 2017

கிளிநொச்சி பொன்னநகர் மத்தி 72 வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள் தமக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் மத்தி கிராமத்தில் உள்ள குடும்பங்கள் குடிநீர், போக்குவரத்துக்கான வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைத்;துக் கொடுக்கப்பட்ட 72 மாதிரி வீட்டுத்திட்டத்தில் உள்ள குடும்பங்கள் தங்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் இதுவரை தங்களுக்கான காணி

அக்கராயன் வீதியில் விபத்து இருவர் காயம் (காணொளி)

Posted by - January 2, 2017

முல்லைத்தீவு அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் முறிகண்டி-அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த ரெயிலுடன், முறிகண்டியிலிருந்து அக்கராயன் நோக்கி பயணித்த கப் ரக வாகனம், பாதுகாப்பு சமிக்ஞையை மீறி கடக்க முற்பட்டபோது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை