தேரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
நீதிமன்ற உத்தரவுக்கமைய செயற்படுமாறு பொல்ஹேன்கொட எலன் மெதினியாராம விகாராதிபதி உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் சூழலியலாளர்கள் உள்ளிட்ட பிரதேச மக்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறையிட்டுள்ளனர். குறித்த விகாரையில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதால் தாம் அசௌகரியத்துக்கு உள்ளாவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்க்கொள்ளப்பட்டது.

