கங்குலியை தலைவராக நியமிக்க வேண்டும் – கவாஸ்கர்

244 0

c74c0795-b007-4876-9c9b-4cce97f0733d_s_secvpf-1இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதியத் தலைவராக சவுரவு கங்குலி நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

லோதா குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறியதால், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் அனுரக் தாகூர் மற்றும் செயலாளர் அஜய் ஷேர்க் ஆகியோரை இந்திய உயர் நீதிமன்றம் பதவி நீக்கியுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கவாஸ்கர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம் புதிய அறிவிப்பின் ஊடாக, மாநில கிரிக்கட் சபைகளின் பதவிகளுக்கு உண்மையான கிரிக்கட் வீரர்கள் தெரிவாக வாய்ப்புகள் இருக்கின்றன.

இது வரவேற்கப்பட வேண்டியது.

அத்துடன் புதிய தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்படுவதற்கு தாம் ஆதரவளிப்பதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.