நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பதில் வெட்கமடைகின்றேன் -மனோ
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து வெட்கமடைவதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக போராடியமையே லசந்த,தனது உயிரை பலிகொடுக்க காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு,எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பொரளை கனத்தையில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வில்

