மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (காணொளி)
டெங்கு நோய் பெருக்கம் அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்புகள் உள்ள பகுதியாக மட்டக்களப்பு மாநகர சபை பகுதிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 210 வீடுகள் மற்றும் அதனை அண்டிய இடங்கள் சோதனையிடப்பட்டன. இதன் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக 12 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய

