விமலின் மகளை தாக்கிய பொலிஸ் அதிகாரி..!
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றைய தினம் கைது செய்யப்பட்டமை முக்கிய விடயமாக தற்போது விமர்சிக்கப்படுகின்றது .
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றைய தினம் கைது செய்யப்பட்டமை முக்கிய விடயமாக தற்போது விமர்சிக்கப்படுகின்றது .
தடுப்பு கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டவரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆப்கனில் உள்ள கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் நகரில் உள்ள ஆளுநர் வீட்டருகில் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா அல் கபி உள்ளிட்டவர்கள் ஆளுநர் வீட்டிற்கு வந்தபோது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும்;, 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பில் ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர்
அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கி விட்டீர்கள் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதி உரையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவி காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் சிகாகோவில் நடந்த வழியனுப்பு விழா நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதி உரையை இன்று நிகழ்த்தினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்களிடையே
நாட்டில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரித்துள்தாக சுகாதார பிரிவின் சமூக வைத்திய பிரிவின் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். குளிரான காலநிலை காரணமாக, கர்ப்பிணிகள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு இன்புளுவன்சா நோய்த்தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்புகள் காணப்படுவதாகவும் குடும்பநல சுகாதார பிரிவின் சமூக வைத்திய பிரிவின் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்தார். காலநிலை மாற்றமடைந்து வருவதாகவும் இந்த குளிரான காலநிலையால் நாட்டில் நோய்த் தாக்கங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களினது பிணை மனு யாழ்.மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு எதிரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. மற்றுமொருவர் நபர் வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை வேர்னன் பெர்ணாண்டோ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சிக்காக உயிர்த்தியாகம் செய்த இந்ரபால ஜயவீர, விஜயலால் மென்டிஸ், பாடின் சில்வா ஆகியோரின் இருபத்தெட்டாவது நினைவூ நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய, மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டுமெனவூம், கட்சியில் பணியாற்றுவோரின் நடத்தைப் பண்புகளுக்கமையவே கட்சி ஒளி பெறும் எனவூம்
2017 பெப்ரவரி 06 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிவரையான ஒரு வார காலம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியம், மகிழ்ச்சி, வினைத்திறன் மற்றும் வெற்றிகரமான இலங்கையர்களை உருவாக்குவதற்காக 2017 பெப்ரவரி 06 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிவரையான ஒரு வார காலம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் நிகழ்வுகளை நாடு பூராவும் அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இவ் விடயம்
தகவலறியும் உரிமைச் சட்டம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி, வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த வர்த்தமானி வெளியானதன் பின்னர், தமக்குத் தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும், நாட்டின் பிரஜைகள் பெற்றுக்கொள்ளலாமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில், சம்பளம் இல்லாமல் பணியாற்றிய இலங்கைப் பெண்ணொருவரின் சம்பள நிலுவைத் தொகை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சம்பளம் இல்லாமல் பணியாற்றிய கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய செல்லத்துரை ஜெக்லின் எனும் பணிப்பெண்ணின் சம்பள நிலுவைத் தொகை, நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. ஒரு குழந்தையின் தாயான ஜெக்லின் கடந்த 2013ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாட்டிற்குப் பயணமானார். அங்கு அவர் பணியாற்றிய வீட்டு