விமலின் மகளை தாக்கிய பொலிஸ் அதிகாரி..!

261 0

wimal-weeravansa-1நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றைய தினம் கைது செய்யப்பட்டமை முக்கிய விடயமாக தற்போது விமர்சிக்கப்படுகின்றது .

கூட்டு எதிர்க்கட்சியினரின் கருத்து இது அரசியல் ரீதியான ஓர் பழிவாங்கல் என்பதே அத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட கைதாகவுமே இதனை வர்ணித்து வருகின்றனர்.

விமலின் கைதினை காரணம் காட்டி கூட்டு எதிர்க்கட்சியினருக்கு மக்கள் ஆதரவு திரட்டும் வகையிலேயும், நல்லாட்சிக்கு எதிராகவும் மக்களை விமர்சிக்க வைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

முக்கியமாக அண்மைக்காலமாக விமலுக்கும் அவர் மனைவிக்கும் மகளுக்கும் ஓர் அவப்பெயரை உண்டாக்கிய சம்பவம் அவரது வீட்டில் ஒரு இளைஞன் மரணமடைந்தது.அந்த சம்பவம் பெரிதாக விமர்சிக்கப்பட்டது ஆனால் இப்போது தடம் தெரியாமல் போய்விட்டது என்று கூறப்படுகின்றது. விமலுக்கு எதிராக கருத்து வெளியிடுபவர்கள் கூட இதனை மறந்து விட்டனர்.

அரசியல் வாதிகள் செய்த குற்றங்கள் அப்படியே மூடி மறைக்கப்படும் என்பதற்கு இது ஓர் சிறப்பான எடுத்துக்காட்டு எனவும் அரசியலுக்கு மட்டுமே பகைவர்கள் மற்ற வகையில் அரசியல்வாதிகள் அனைவரும் நண்பர்களே என்பதையும் இந்த சம்பவம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் அப்போது இறந்து போன இளைஞன் இயற்கையாக இறக்கவில்லை என்பதனை மருத்துவச் சான்றிதழ் உறுதி செய்தது. அவருக்கு எந்த நோயும் இருக்க வில்லை எனவும் மருத்துவ அறிக்கை கூறியது.ஆனாலும் அந்த வழக்கின் இப்போதைய நிலை தொடர்பில் மர்மமே. குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு அலைவது சிறுமியான தன் மகளுக்கு அவதூறு எனவும் விமல் மற்றும் அவரது மனைவி தெரிவித்தனர்.

ஆனாலும் நேற்றைய தினம் விமலின் மனைவி மற்றும் மகள் நீதிமன்றுக்கு முன்னால் அழுதவாறு சென்றனர். அரசியல் வாதிகளின் கைதுகள் என்பது நிரந்தரம் இல்லை என்பது இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.ஓர் பிரபல அரசியல் வாதியான விமலின் குடும்பத்தாருக்கு இது நன்றாக தெரிந்திருந்தும் அவர்களின் நேற்றைய செயற்பாடு மக்கள் மத்தியில் ஆதரவு தேடி பரிதாபத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் செயலே எனவும் விமர்சிக்கப்படுகின்அவர்கள் நேற்று கண்ணீர் வடித்தவாறு தோன்றிய பரிதாபத்தோற்றம் இதனை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகின்றது.

மேலும் விமலின் உறவுப் பெண் ஒருவர் “நான் சித்தப்பாவின் கையை பிடித்துக் கொண்டு இருக்கும் போது பொலிஸ்காரர் ஒருவர் என்னை தாக்கினார்..,ஐக்கிய தேசிய கட்சியினருக்க வாக்களித்தவர்களுக்கு இப்போது புரியும் போதுமா? இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

மேலும் ஒருவர் விமலின் மகளை தாக்கிய பொலிஸ் அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் வெளியே வரச் சொல்லுங்கள் நாம் பார்த்துக்கொள்கின்றோம் எனவும் கூச்சல் இட்டுள்ளார்.இவை பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்த ஒரு செயல் என்றே கூறப்படுகின்றது. அதேபோல விமலின் கைதினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் அனைவரும் எதிர்க்கின்றார்கள்.

ஆனால் அவர் வீட்டில் மரணமடைந்த இளைஞன் தொடர்பில் எவரும் கருத்து வெளியிடவில்லை இவற்றினை பார்க்கும் போது பொது மக்களுக்கு ஒரு நீதி அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியா என்ற வகையிலும் கருத்துகள் கூறப்படுகின்றது.இவ்வாறானதொரு மரணம் சாதாரண ஒரு நபரின் வீட்டில் நடைபெற்றிருந்தால் இந்தளவு வேடிக்கை பார்க்குமா பொலிஸ் தரப்பு என்பது வேடிக்கையான விடயம்.

அடுத்து இந்த கைது இடம் பெறும் என்பது விமல் ஆதரவாளர்கள், கூட்டு எதிர்கட்சியினர் உட்பட பொதுமக்களுக்கும் கூட தெரிந்தது எவ்வாறு?

நேற்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு முன்னால் விமலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த கூட்டம் இவற்றினை தெளிவு படுத்தியது.ஆக மொத்தம் இவை அனைத்துமே அரசியல் நாடகமே எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.