சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும்- மைத்திரிபால சிறிசேன

243 0

download-2சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை வேர்னன் பெர்ணாண்டோ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சிக்காக உயிர்த்தியாகம் செய்த இந்ரபால ஜயவீர, விஜயலால் மென்டிஸ், பாடின் சில்வா ஆகியோரின் இருபத்தெட்டாவது நினைவூ நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய, மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டுமெனவூம், கட்சியில் பணியாற்றுவோரின் நடத்தைப் பண்புகளுக்கமையவே கட்சி ஒளி பெறும் எனவூம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நற்பண்பு, நல்லொழுக்கம், நாட்டை நேசித்தல், எளிமை, நேர்மை ஆகிய அனைத்தும் அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி ஊழல், மோசடி, களவு, வீண்விரயம் அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றை மேற்கொள்ளும் நபர்கள் இருக்கும் கட்சி தோல்வியடைவது மட்டுமன்றி, அந்த அரசியல்வாதிகள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டுக்காக தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றும் போது சமகால பிரச்சினைகளுடன் நெகிழ்வூத்தன்மையாக முன்செல்ல வேண்டுமெனவூம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கிய எஸ்.டபிள்யூ+.ஆர்.டி.பண்டாரநாயக்கா வழங்கிய கோட்பாட்டை, புதிய உலகத்துக்கு பொருத்தமானவாறு மாற்றியமைத்து பலமான கட்சியாக, சிறிலங்கா சுதந்திர கட்சி முன்னோக்கி பயணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.