குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது- சிறிசேன

Posted by - January 26, 2017

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். பிணைமுறி தொடர்பான சம்பவங்களை மூடி மறைப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனினும், ஊழல், மோசடி மற்றும் தவறான

மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 26, 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். புடினின் வாழ்த்து செய்தியில், தனது மனமார்ந்த இந்திய குடியரசு தின விழா வாழ்த்துக்களை ஏற்றுகொள்ளுங்கள் எனவும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா ஆக்கபூர்வமாக முக்கிய பங்காற்றுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான ரஷ்யாவின் வெளிவிவகார கொள்கைகளில் நிலவும் சிறப்பான ஒத்துழைப்பிற்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் எனவும் புடினின் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது- பிரணாப் முகர்ஜி

Posted by - January 26, 2017

இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவதாக இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 68ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சராசரி நபர் வருமானம் கடந்த 60 ஆண்டுகளில் 10மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உணவு பொருட்கள் எற்றுமதியில் இந்தியா முன்னிலை வகித்து வருவதாகவும், ஜனநாயகத்தில் உரிமைகள் உள்ளது போல் கடமையும் பொறுப்பும் உண்டு எனவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். உலக

செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள் என்ன-ரேவதி மாரிமுத்து

Posted by - January 26, 2017

செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள் என்ன என தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய சூழலியலாளர் ரேவதி மாரிமுத்துவின் கேள்வியெளுப்பியுள்ளார். யாழ்ப்பாணப் பல்ககைல்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ‘தாய் மண்’ எழுச்சிப் பேருரையை தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய சூழலியலாளர் திருமதி ரேவதி மாரிமுத்து வழங்கிய போது இவ்வாறு கேள்வியெழுப்பினார். விவசாயிகள் பலருக்கு விவசாயத்தில் மாற்று வழிகளைக்

சட்டவிரோதமாக சிகரெட் விற்க முற்பட்டவர்களுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்

Posted by - January 26, 2017

துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற இருவருக்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தினால் 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை கூட்டத்திற்கு நுவரெலி யாவிலிருந்து எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள்

Posted by - January 26, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ தலைமையில் நாளை 27ம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அங்கத்தவர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 26, 2017

கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு தமிழர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை லுத்தினர் கமாண்டர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Posted by - January 26, 2017

முதற் தடவையாக கோப் அறிக்கை மேலதிக நடவடிக்கைகளுக்காக, சபாநாயகரால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக வெற்றி எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை(காணொளி)

Posted by - January 26, 2017

நுவரெலியா, ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை, இன்று நடைபெற்றது. ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை, நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பத்மஸ்ரீ முனுசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது. காலை 07 மணிக்கு ஹற்றன் டன்பார் மைதானத்திலிருந்து ஆரம்பமான பொலிஸ் அணிவகுப்பு, ஹற்றன் நகர்வழியூடாக ஹற்றன் பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதன்போது நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பத்மஸ்ரீ முனுசிங்க, பொலிஸ் வாகனங்களை சோதனைக்குட்படுத்தினார். இதேவேளை இதுவரை காலமும் ஹற்றன்