ஒழுங்கான, புத்தியுடைய எவரும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இல்லை என, பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் நாட்டை நினைத்து பணியாற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே அவர் இன்னும் அரசியலில் உள்ளதாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

