தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - January 30, 2017

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வறட்சி காலநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் மழை காலநிலை நாளை முதல் குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தூறலான மழை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை நண்பகல் 2.00 மணியின்

ஹம்பாந்தோட்டையில் கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கு பிணை

Posted by - January 30, 2017

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 29 பேரில் நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் ஏனைய சந்தேகநபர்களை பெப்ரவரி 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்தி வலய திறப்பு விழாவின் போது இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெலிகொம் மேன்பவர் ஊழியர் சங்கத்தின் உப தலைவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

Posted by - January 30, 2017

இலங்கை டெலிகொம் மேன்பவர் ஊழியர் சங்கத்தின் உப தலைவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஊழியர் சங்கத்தின் உப தலைவரான எஸ். மங்கள காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள டெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த மங்கள, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வீட்டுக்கு வருவதாக கூறி, உண்ணவிரதப் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். எனினும் அன்றைய தினத்தில் இருந்து

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் பிரச்சாரமும் கையெழுத்து போராட்டமும் ……….

Posted by - January 30, 2017

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இச்செயற்திட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் பிரச்சாரமும் கையெழுத்து போராட்டமும் இடம்பெற்றது. இச்செயற்திட்டத்தை மாற்று கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்தி வருகின்றதுடன் .கடந்த 18ஆம் திகதி காலியில் ஆரம்பமான இந்த கையெழுத்து வேட்டை 03ஆம்

மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை

Posted by - January 30, 2017

மீன்பிடி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்களை பயன்படுத்தும் மீனவர்களை கைது செய்யுமாறு கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வெடி பொருட்களை விற்பனை செய்வோரை கைது செய்யுமாறு அமைச்சர் இதன்போது பாதுகாப்பு படையினரிடம் கேட்டுள்ளார். மீனவர்கள் மின் பிடிப்பதற்காக அதிகளவில் வெடிபொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் கடற்றொழில் அமைச்சுக்கு முறைபாடுகள் கிடைத்துள்ளன. டைனமைட் போன்ற வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாம் என்று மீனவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்

வுவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் விசேட கூட்டம்

Posted by - January 30, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் விசேட கூட்டமொன்று வுவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ‘அமைதியகத்தில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் இந்தக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை இக் கூட்டத்திற்கு செய்திகள் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை தங்கள் உறவுகளை விடுதலை செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன எதிர்வரும் 9ஆம்

ஒரு கிலோ கொக்கேய்னுடன் தப்பியோடிய சந்தேக நபரை கைது

Posted by - January 30, 2017

மதுவரி திணைக்களத்தின் கொழும்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த தேடுதல் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேடுதல் நடத்தும் போது ஒரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். மதுவரி திணைக்களத்தின் பரிசோதகர் குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் இந்த தேடுதலை நடத்தியிருந்தமை

திருகோணமலை கடலில் இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Posted by - January 30, 2017

திருகோணமலை – அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நேற்றைய தினம் மாலை நீராடிய இளைஞர் குழுவில் காணாமல் போயிருந்த இருவரது சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளன. ஒருவரின் சடலம் ஜமாலியா கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மற்றைய நபரின் சடலம் பள்ளத்தோட்டம் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. நண்பர்கள் 6 பேர் சேர்ந்து கடலில் நீராடுவதற்காக சென்றிருந்த நிலையில் அவர்களில் 3 பேர் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று நீரில் மூழ்கியுள்ளனர். மூழ்கியவர்களில் ஒருவர்

இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Posted by - January 30, 2017

இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, காலிமுகத்திடல் சுற்றுவட்டத்துக்கான காலி வீதி மற்றும் பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கான வீதி என்பன, முழுமையாக மூடப்படுமென, பொலிஸார் அறிவித்துள்ளனர். இதற்கமைய, காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடல்

விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கு கருணா முக்கிய ஆலோசனை-திலும் அமுனுகம

Posted by - January 30, 2017

விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கான முக்கியமான ஆலோசனைகளை முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கியதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுளளார். நுகேகொடை கூட்டத்தில் மேடை ஏறபோவதாக அமைச்சர்கள் மேடையில் ஏறாத நிலையில், பயங்கரவாதியாக நாட்டுக்கு பெரும் அழிவை ஏற்படுத்திய கருணா அம்மான் மேடை ஏறியது குறித்து என்ன கூறுகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த