விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கு கருணா முக்கிய ஆலோசனை-திலும் அமுனுகம

236 0

விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கான முக்கியமான ஆலோசனைகளை முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கியதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுளளார்.

நுகேகொடை கூட்டத்தில் மேடை ஏறபோவதாக அமைச்சர்கள் மேடையில் ஏறாத நிலையில், பயங்கரவாதியாக நாட்டுக்கு பெரும் அழிவை ஏற்படுத்திய கருணா அம்மான் மேடை ஏறியது குறித்து என்ன கூறுகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த திலும் அமுனுகம, முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு காலத்தில் பயங்கரவாதியாக இருந்தார் என்பது உண்மை.

கருணா புலிகளுக்கு எதிரான போருக்கு எந்த உதவியையும் வழங்கவில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

அது உண்மையல்ல போர் நடைபெற்ற காலத்தில் போர் முன் நகர்வுகளை ஓரிடத்தில் இருந்து முன்னெடுக்காமல் மூன்று முனைகளின் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என்ற யோசனையை முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானே முன்வைத்தார்.

ஒரு முனையில் இருந்து தொடர்ந்தும் போரிட முடியாது எனவும் புலிகளிடம் இருக்கும் படைப்பலம் குறைவானது என்பதால், மூன்று முனைகளில் இருந்து போரை முன்னெடுத்தால், புலிகளை இலகுவாக வெல்ல முடியும் என்ற ஆலோசனையை சரத் பொன்சேகாவுக்கும் எமது அரசாங்கத்திற்கு கருணா அம்மனே வழங்கினார்.

கருணா அம்மான் ஒரு காலத்தில் பயங்கரவாதியாக இருந்திருக்கலாம். இந்த நாட்டில் இருந்த 30 ஆண்டு கால பயங்கரவாத போரை முடிவுக்கு கொண்டு வரும் பொறுப்புகளில் அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியவர்.

பிச்சை எடுக்கும் அமைச்சர்களுக்கு முதுகெலும்பில் பலம் இல்லாவிட்டாலும் ஒரு காலத்தில் புலிகளின் உறுப்பினராக இருந்து. பின்னர் நாட்டில் இருந்த புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவிய கருணா தமிழராக இருந்தாலும் முதுகெலும்பு உள்ளவராக நுகேகொடை மேடையில் ஏறியது குறித்து எமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.