சமரச முயற்சிகள் தோல்வி -சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாபுலவு மக்கள்!

Posted by - February 1, 2017

முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு தமது நடவடிக்கைகளுக்கு  இரண்டு வாரங்களோ ஒரிரு மாத காலமோ தேவைப்படலாம். எனவே அந்த அவகாசத்தை முல்லைத்தீவு விமானப்படை தளபதி கோரிய போது மாவட்ட அரச அதிபரும் அவர்களது பதிலுக்கு கால அவகாசம் ஒன்றை வழங்குமாறும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் சமரச முயற்சிகளிலில் ஈடுபட்ட போதிலும் அது எவற்றையும் ஏற்றுக்கொள்ளாத கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முல்லைத்தீவு விமானப்படை

மாணவன் கொலை – சாட்சி பதிவுகள் ஆரம்பம்

Posted by - February 1, 2017

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி துடுப்பாட்ட விளையாட்டின் போது ஒருவர் அடித்து கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரனையின் மூன்றாவது சாட்சியாளரின் சாட்சிய பதிவானது இடை நிறுத்தப்பட்டு எனைய சாட்சிப் பதிவுகளுக்காக நாளைய தினம் வரை ஒத்திவைக்க யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ்க்கும் இடையில் இடம்பெற்ற துடுப்பாட்ட போட்டியின் போது இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்

மைதானத்தை உழுத உழவு இயந்திரத்தை மறித்து மக்கள் எதிர்ப்பு – பொலீஸாா் சமரசம்

Posted by - February 1, 2017

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவில் பெரியபரந்தன் தாரணிகுடியிருப்பு வானவில் விளையாட்டு மைதானத்தை இன்று காலை உழவு செய்து உழவு இயந்திரத்தை மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனா். குறித்த காணி தங்களுடையது என்று இருவா் உரிமை கோரி வருகின்றனா். இதேவேளை குறித்த காணியை தங்கள் கிராம இளைஞர்களும், முன் பள்ளி சிறாா்களும் 1991ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகின்றனா் என பொது மக்களும் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில் குறித்த காணி தொடா்பில் அடிக்கடி உரிமை கோருகின்றவா்களுக்கும்

2017 உலகக்கிண்ணப்போட்டியில் இரண்டு கிளிநொச்சி மாணவிகள்

Posted by - February 1, 2017

2017.02.17 தொடக்கம் 23 வரை பங்களாதேஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள்   போட்டியில் பங்குபற்றவுள்ளனா் கிளிநொச்சி இந்துக்கல்லூரிஉயர்தர மாணவிகளான துலக்சினி  விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர் அத்துடன் மிக குறுகிய காலத்திற்குள் பயிற்சிகளைப் பெற்று கடந்தவருட இறுதிப்பகுதியில்  நடைபெற்ற தேசியரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட றோல் போல் ஆண் பெண் ஆகிய இரு

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

Posted by - February 1, 2017

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, சிறுபான்மையின மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம், காணாமல் போனோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் அகிம்சை ரீதியான போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்றது. காணாமல்

துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை தாக்குதல்

Posted by - February 1, 2017

துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி மீது பொலிஸாரினால் நீர்ப்பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய சம்பவம்; அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

Posted by - February 1, 2017

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அரச அதிகாரிகள் குறித்து உள்நாட்டலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ட்ரம்பின் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்

Posted by - February 1, 2017

இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளின் 71 பேர் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருணா குறித்த விசாரணைகள் நிறைவு

Posted by - February 1, 2017

கருணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.