ட்ரம்பின் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்

258 0

இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளின் 71 பேர் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட நாடுகளில் துருக்கி, இலங்கை, பாக்கிஸ்தான், பிரான்ஸ், அல்ஜீரியா, ஜோர்டான், கட்டார், செனகல், சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன.

ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் டிரம்பின் உத்தரவிற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.