துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு பேரணி மீது பொலிஸாரினால் நீர்ப்பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துறைமுகத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேரணி காரணமாக கொழும்பு காலி முகத்திடல் மற்றும் கொழும்பு லோட்டஸ் வீதி பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

