சீனாவின் இராணுவத்தளத்துக்கு இலங்கையில் இடமில்லை!
இலங்கையின் இராணுவ மையங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அறிவித்துள்ளது.
இலங்கையின் இராணுவ மையங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அறிவித்துள்ளது.
குற்றம் இழைத்தவர்கள் சிறைக்கு வெளியில் உள்ள நிலையில், அரசாங்கம் பொது மக்களை சிறைப்பிடிப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தினார். வாகன முறைக்கேடு தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசங்சவை நேரில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மத்திய வங்கியின் நிதி முறியுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை. ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பவில்லை. இந்தநிலையில்,
காளஹஸ்தி சிவன் கோவில் யாக சாலையில் நேற்று(4) மாலை ‘திடீர்’ தீ விபத்து ஏற்பட்டது.
இலங்கை, இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினையை அக்கறையுடனான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் பி. சிதம்பரம் இதனை தெரிவித்துள்ளார். தமிழக பாம்பன் பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்தது. இவ்வாறு உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் இந்தப்பிரச்சினையில் பயனளிக்காது. இரண்டு
அடிதடி வழக்கில் கைதான கோவை கல்லூரி மாணவர்களுக்கு 100 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனையை வழங்கி உள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க இந்த வருடத்தின் மே மாதம் அளவில் சீனாவின் பீஜிங் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கான இலங்கை தூதுவர் இதனை நேற்று தெரிவித்தார். சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே பிரதமரின் இந்த பயணம் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில் ஹம்பாந்தோட்டையில் சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட கைத்தொழில் வலையத்திற்கு எதிர்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமையை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சீனாவிற்கு இலங்கையில் எழுப்பப்பட்ட முதல் எதிர்ப்பு
சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என சென்னை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். நிலைமை கட்டுக்குள் இருப்பதால் 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது என்று ஜார்ஜ் கூறியுள்ளார். சென்னை மாநகர காவல் சட்டப்பிரிவு 41-ன் கீழ் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணி பகுதியின் அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.ஸ்ரீமோகனன் ஆகியோர் குறித்த கரையோரப்பகுதியை மக்களிடம் கையளித்தனர். ஏற்கனவே கடந்த மாதம் 14ஆம் திகதி ஊறணி பகுதியில் கரையோரமாக 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும் தரையில் 2 ஏக்கர் அளவுடைய பகுதியும் மக்களுக்கு
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நேற்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் மதுபான சாலைகள் முடப்பட்டிருந்தன. இதனை பொருட்படுத்தாது மதுபான விற்பனையில் ஈடுப்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், குறித்த விடுதிக்கு எதிராக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாகவும் யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மோடி தேர்தல் பிரசாரம் தொடங்கினார். ஊழல் சக்திகளை விலக்கி வைக்க அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.