பிரேசில்: போலீசாரின் வேலைநிறுத்ததால் ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க அரசு படைகள் தீவிரம்

Posted by - February 7, 2017

கடந்த சனிக்கிழமையன்று தங்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, பிரேசிலின் தென் கிழக்கு மாநிலமான எஸ்பிரெட்டோ சான்டூவில் போலீசார் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால், அந்நாட்டு துருப்புக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் இருநூறு உறுப்பினர்கள் இம்மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆப்கானில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன: ஐநா அமைப்பு தகவல்

Posted by - February 7, 2017

கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பதிவான பொதுமக்களின் இறப்புக்கள் இது வரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

Posted by - February 7, 2017

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் யாழ். கச்சேரியில் நேற்று யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது, இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்கான தங்குமிட, மலசலகூட, உணவு, நீர், போக்குவரத்து வசதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் இல்லையாம்!

Posted by - February 7, 2017

இலங்கைக்கு எதிராக மற்றொரு யுத்தக் குற்றச்சாட்டு பிரேரணையொன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. அவ்வாறு எந்த ஒரு பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவோ அதனை பின்போட இலங்கை முயற்சி மேற்கொள்ளவோ இல்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து மௌனம் காக்கும் பாதுகாப்பு அமைச்சு! – சம்பந்தன் விசனம்

Posted by - February 7, 2017

தமது நிலத்தை விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி, விமானப்படை முகாமின் முன்பாக எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் கேப்பாப்புலவு மக்கள், இன்று மாலைக்குள், தமது பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சு தமது கோரிக்கை குறித்து எந்தப் பதிலையும் வழங்காதிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விசனம் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் 4 மணித்தியாலங்களே பணியில் ஈடுபடுகின்றனர்!

Posted by - February 7, 2017

அரச ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்களே பணியில் ஈடுபட்டு வருவதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் ஆதரவாளர்கள் 400 பேர் அதிரடியாக கைது

Posted by - February 7, 2017

துருக்கி நாட்டின் பல்வேறு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 400 ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் புதிய அதிநவீன ஏவுகணையால் இந்தியா, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

Posted by - February 7, 2017

சீனாவின் புதிய அதிநவீன ஏவுகணையால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.