மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-பந்துல குணவர்தன
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான 662 மில்லியன் ரூபா பணத்தை அர்ஜூன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட

