‘ஜெனீவா அழுத்தங்களை சமாளிப்பதற்கே புலி நாடகம்’ – சிறிதரன்
‘தமிழ் மக்களை, அரசாங்கம் தொடர்ந்தும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறதா” என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “ஜெனீவாவில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிப்பதற்கு புலிகள் மீண்டும் மீளெழுகின்றனர் என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா” என்றும் வினவியது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கூட்டமைப்பு எம்.பியான சிறிதரன் மேற்கண்டவாறு வினவினார். “வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செல்லும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எப்பொழுதும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் பின்தொடர்வார்கள். இவ்வாறான நிலையில்

