நவீன முறையில் தர்பூசணி சாகுபடி: விவசாயிகள் புதிய முயற்சி

382 0

மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் எடப்பாடி பகுதியில் நவீன முறையில் தர்பூசணி சாகுபடி செய்யும் புதிய முயற்சியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் தமிழக விவசாயிகள் அவ்வப்போது கிடைத்திடும் குறைந்தளவு நீரைகொண்டு நவீன முறையில் விவசாயம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் எடப்பாடியை அடுத்துள்ள மொரப்பட்டி, வெள்ளகவுண்டனூர் பகுதி விவசாயிகள் எதிர் வரும் கோடைகாலத்தை கருத்தில் கொண்டு நவீன முறையில் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர்.

பாலிதீன் விரிப்புகளால் மூடப்பட்டு சொட்டு நீர் பாசணத்தின் மூலம் பயிர் செய்யப்படும் இந்நவீன சாகுபடி முறையில் பகுஜா, சுகர்குயின் உள்ளிட்ட ரகங்கள் பெருமளவில் பயிர்செய்யப்படுகிறது.

இப்பகுதியில் தர்பூசணி பயிரிட்டுள்ள விவசாயி பாலமுருகன் கூறியதாவது:-

கோடைகாலத்தில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பயிர் செய்யப்பட்டுள்ள இவ்வகை தர்பூசணி ரகங்கள் குறைந்த அளவு நீரில் அதிக அளவு மகசூல்கொடுக்ககூடிய வகையாகும்.

மேலும் இந்த உயர் வகை தர்பூசணி பயிரிடப்பட்ட 60-ம் நாள் முதல் மகசூல் தர வல்லது ஏக்கருக்கு சுமார் 22டன் வரை தர்பூசணி மகசூல் கிடைதிடும் நிலையில் எதிர்வரும் மாதங்களில் கடுமையான கோடை வெப்ப காலங்களில் இதன் தேவை அதிகரித்துள்ளதால் இவ்வகை தர்பூசணிகள் நல்ல விலைபோக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் இப்பகுதியில் தர்பூசணி பயிர்செய்துள்ள விவசாய தோடங்களை நோக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் படையெடுத்து வருகின்றனர்.