விமலின் வழக்கு விசாரணையின் போது கூச்சலிட்டவருக்கு தண்டனை அறிவிப்பு

400 0

தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட போது, நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட நபருக்கு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விமல் உள்ளிட்ட இருவரை கடந்த 24ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, சுதேஷ் பிரேமலால் பொன்சேகா என்பவர் நீதவானை நோக்கி கைகளை நீட்டியபடி கூச்சலிட்டு குழப்பநிலையை தோற்றுவித்ததாக கூறப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவருக்கு, ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றறை வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் 1000 ரூபா அபராதமும் விதிப்பதாக கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.