ஓ.பன்னீர் செல்வத்தின் பக்கம் மேலும் ஒரு எம்.பி

Posted by - February 11, 2017

தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சசிகலா – பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சசிகலா தனக்கு 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்று கூறி ஆட்சியமைக்க கோரும்படி ஆளுநரை வலியுறுத்தி வருகிறார். சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க தயார் என்று பன்னீர் செல்வம் கூறி வருகிறார். பன்னீர் செல்வத்திற்கு ஒவ்வொருவராக

சசிகலா எச்சரிக்கை எதிரொலி – ஆளுநர் மாளிகையில் போலீஸ் குவிப்பு

Posted by - February 11, 2017

அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று முன் தினம்  இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது சசிகலா, அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடித்தத்துடன், தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரினார். அதற்கு, ஆளுநர் தரப்பிலிருந்து இன்னமும் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. இன்று பிற்பகலில், போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக தொண்டர்களிடம் பேசிய சசிகலா, “ஓரளவுக்குத் தான் பொறுமையைக் கையாள முடியும். அதற்குமேல்

இன்று வரை காத்திருந்தோம்; நாளை வேறு விதத்தில் போராடுவோம்- சென்னை திரும்பிய சசிகலா பேட்டி

Posted by - February 11, 2017

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று மதியம் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா திடீரென காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் தங்கியிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நேரில் சென்று சந்தித்தார். எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, பின்னர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் சென்னை திரும்பினார். இரவு 8.30 மணியளவில் சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்த அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘அதிமுக

பன்னீர்செல்வத்திற்கு சரத்குமார் ஆதரவு

Posted by - February 11, 2017

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர். 2 பேரும் தங்களுடைய பலத்தை நிரூபிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சசிகலா மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியை சேர்ந்தவர்கள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்று அவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ராஜமாணிக்கம், ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே ஆதரவு

மனதில் இருப்பதை சொல்லுங்கள் – எம்.எல்.ஏக்களிடம் தனித்தனியாக கேட்ட சசிகலா

Posted by - February 11, 2017

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை சசிகலா அளித்திருந்தாலும், உடனடியாக அவரை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா இன்று பிற்பகல் கூவத்தூர் சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன்,  செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர். இந்நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏக்களையும் தனித் தனியாக அழைத்துப் பேசிய சசிகலா, அவர்களின் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறுமாறு கேட்டுள்ளார். குறிப்பாக

வவுனியா வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி

Posted by - February 11, 2017

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இராணுவ வீரர் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அளுநருடன் சுப்பிரமணிய சுவாமி சந்திப்பு

Posted by - February 11, 2017

தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்த முடிவை எடுக்க முடியாமல் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருந்து வருகிறார். இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா, ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். இதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை. இதற்கிடையே பா.ஜனதாவின் மேல்சபை எம்.பி.யும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான பொதுக்கலந்துரையாடல்!

Posted by - February 11, 2017

அரசியலமைப்பு சட்டசபையின் உபகுழுவின் மத்திய, பிராந்திய உறவுகள் சம்பந்தமான அறிக்கை பற்றிய பொதுக் கலந்துரையாடல் இன்றைய தினம் யாழில்நடைபெற்றது.

இலங்கையை பிரிக்க முயற்சித்தால்……….(காணொளி)

Posted by - February 11, 2017

இலங்கையை பிரிக்க முயற்சித்தால் நாட்டின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாகிவிடும் என்று தென்னிலைங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவை சந்திப்பதற்காக, கொழும்பில் உள்ள சில பௌத்த பிக்குகள் ருக்மலே தம்மகீர்த்தி தேரர் தலைமையில் வெலிக்கடை சிறைக்கு இன்று காலை விஜயம் செய்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ருக்மலே தம்மகீர்த்தி தேரர், அரசாங்கத்திற்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது(காணொளி)

Posted by - February 11, 2017

யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டிதுறையில், தொண்டமானாறு காட்டக்குளம் கடற்கரையில், 188 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடல்வழியாக, இலங்கைக்கு குறித்த கஞ்சா கடத்திவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 12:15க்கு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.