ரோஹிங்கிய மக்களுக்கு எதிரான வன்முறை ஓர் “இன அழிப்பு” – அமெரிக்கா

Posted by - November 23, 2017

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் ஓர் “இன அழிப்பு” என ஐக்கிய அமெரிக்க பிரகடனம் செய்துள்ளது. ரோஹிங்கிய மக்கள் மியன்மாரின் இராணுவத்தினரால் தாங்கமுடியாத துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். ரோஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் வன்முறைகளை தூண்டுவதாக இராணுவத்தினர் குற்றம் சுமத்தியிருந்தாலும், இராணுவத்தினரின் கொடூரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு ராக்கெய்ன் மாநிலத்தில் இடம்பெறுவது ரோஹிங்கியர்களுக்கு எதிரான இன அழிப்பு என கிடைக்கப்பெறும் தகவல்களை கவனமாவும் முழுமையாகவும் ஆராய்ந்ததன் பின்னர்

ரணில் விக்ரமசிங்க – இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

Posted by - November 23, 2017

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புது டில்லியில் இன்று சந்தித்துள்ளார். நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர், இந்திய பிரதமருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தையும் சந்திக்கவுள்ளார். பிரதமரின் இந்திய வியாஜயம் நாளையுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை சீருடை வவுச்சர் சரியான முறையில் வழங்கப்படும் – கல்வி அமைச்சர்

Posted by - November 23, 2017

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை பெறுக்கொள்வதற்கான வவுச்சர் அட்டைகள் இம்முறையும் சரியான முறையில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சீருடைகளுக்கான வவுச்சர் அட்டைகள் இன்னும் அச்சிடப்படுவதாகவும் பாடசாலைகளுக்கு இன்னும் வவுச்சர் அட்டைகள் வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த கருத்துக்கு விடையளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வவுச்சர் அச்சிடும் வேளைகளில் ஒரு பகுதி நிறைவடைந்திருப்பதாகவும், வவுச்சர் அட்டைகள் சரியான காலப்பகுதிக்குள் வழங்கப்படும் எனவும், பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட

பிரச்சினைகள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக அறிவிக்கவும் – தினேஷ்

Posted by - November 23, 2017

சட்ட ரீதியாக தடைகள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிடுமாறு கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிழையான வர்த்தமானி மற்றும் சட்டத் தீர்ப்புகளை கொண்டிராத உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வர்த்தமானியை உடனடியாக வெளியிடுமாறு அவர்இதன்போது கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

சுதேச மருத்துவத்தின் முன்னேற்றத்திற்கான சகல வசதிகளும் வழங்கப்படும்-மைத்ரிபால

Posted by - November 23, 2017

ஆதிகாலத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய எமது பாரம்பரிய சுதேச மருத்துவத்துறைக்கு உரிய கௌரவத்தை வழங்கி, அதன் முன்னேற்றத்திற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மேலைத்தேய மருத்துவ முறையில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகள் காரணமாக துரித சிகிச்சை முறைகளின் மீது மக்கள் கவனம் செலுத்தியமையினால் பாரம்பரிய சுதேச மருத்துவத்துறை பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள போதிலும் வரலாற்றில் நாம் ஆரோக்கியம் மிகுந்த சமூகமாக காணப்பட்டமைக்கு அனுபவம் வாய்ந்த சுதேச மருத்துவ முறையே

முச்சக்கர வண்டி ,மோட்டார் சைக்கிள் விபத்து : ஐவர் வைத்தியசாலையில்

Posted by - November 23, 2017

ஹெம்மாதகம – மாவனல்லை வீதியின் அல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய பாதை ஒன்றிலிருந்து பிரதான பாதைக்கு பிரவேசிக்க முயற்சித்த வேளையில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவனல்லை பகுதியிலிருந்து வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமே விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹெம்மாதகமை மற்றும் மாவனல்லை

ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 23, 2017

ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி ஆசிரியர் பயிலுனர்கள் இன்று கொட்டகலையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

தங்க பிஸ்கட்டுகளை கடத்தியவர் கைது.!

Posted by - November 23, 2017

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 4 தங்ககட்டிகளை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 12.10 மணியளவில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானப்படைத் தளபதியை சந்தித்தார் கடற்படைத் தளபதி

Posted by - November 23, 2017

புதிதாக கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்.!

Posted by - November 23, 2017

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரினை மீண்டும் போடுமாறு கோரி கடந்த காலங்களில் மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.