வவுனியாவில் ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!
தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல், வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்ல சூழலில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்கு அனுட்டிக்கப்படவுள்ளது. குறித்த நினைவேந்தல் தொடர்பாக வவுனியா

