மாவீரர் தினத்தை இலக்கு வைத்து இராணுவமா.?

Posted by - November 26, 2017

வடக்கில் மாவீரர் தினத்தையும், பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடியதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது மற்றும் இன்றைய தினம் வடக்கில் வல்வெட்டித்துறை பகுதியல் புலிக்கொடிக்கு சமாந்தரமாக மாற்றுக் கொடியொன்றை ஏற்றியமை, பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியமை குறித்தும் இந்த சம்பவங்களின் பின்னர் வடக்கில் இராணுவத்தை

கிளிநொச்சியில் 68 சமூர்த்தி வெற்றிடங்கள் : 5 பேருக்கே நியமனம்.!

Posted by - November 26, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 68 சமூர்த்தி வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் 5 பேருக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சமூர்த்தி திணைக்களத்தின் கீழ் தற்போது 68 வெற்றிடங்கள் காணப்படுகிறன. ஆனால் கடந்த 15ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் வைத்து நாடளாவிய ரீதியில் சமூர்த்தி நியமனங்கள் வழங்கப்பட்டது. இதில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 5 நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை யாழ். மாவட்டத்திற்கு 45 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 42 பேருக்கும் சமூர்த்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிளிநொச்சியில் வெற்றிடம் அதிகமாக

கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

Posted by - November 26, 2017

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது கட்சி மாவட்ட அலுவலகத்தில்இணைப்பாளர் விமல் தலைமையில் இடம்பெற்றது மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி இடம்பெற்றதுடன் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 110 மாவீரர் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைப்பாளர் ஜெகா ,கட்சி உறுப்பினர்கள் ,மாவீரர்களின் பெற்றோர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

UNP, JVP உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - November 26, 2017

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்திப்பு நேற்று (25) மாலை கண்டியில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கலந்துரையாடலின் இறுதியில் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

UNP – TNA யுடன் இணைந்து புதிய அரசாங்கம் !- ஐ.தே.க. மறுப்பு

Posted by - November 26, 2017

தமிழ் தேசியக் கூட்டணியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீ ல.சு.கட்சி எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுடன் கூட்டுச் சேர்ந்தால், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்னவிடம் வினவிய போதே அவர் இதனை மறுத்துள்ளார். “

எகிப்தில் பள்ளிவாசல் மீதான தாக்குதல் – இலங்கை கண்டனம்

Posted by - November 26, 2017

எகிப்தில் – சைனாய் பிரதேசத்தில் இஸ்லாமிய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது மிகவும் கொடூரச் செயலாகும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கமும் பொதுமக்களுக்கும் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும், துயரத்தையும் தெரிவிப்பதுடன் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எகிப்து நாட்டவர் என்ற ரீதியில் ஆழ்ந்த துயரம் கொண்டுள்ள மக்களுக்கும் அந்நாட்டு

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு தயார் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம்!

Posted by - November 26, 2017

ஒருமித்த நாட்டுக்குள்  எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு தயார்  என்பதை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம்.

தேர்தல் குறித்து ஆராய சட்டத்தரணிகள் அடங்கிய குழு நியமனம்!

Posted by - November 26, 2017

உள்ளூராட்சி தேர்தல் குறித்த சட்ட ரீதியான நடைமுறைகளை ஆராய மூன்று சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய தெரிவித்தார்.

2 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை!

Posted by - November 26, 2017

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எவ்வாறேனும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக, பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.