வல்வெட்டித்துறையில் பறந்த புலிக்கொடி
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டமும் பிரபாகரன் பிறந்த மண் வல்வெட்டித்துறையில் புலிகொடியும் ஏற்றப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டமும் பிரபாகரன் பிறந்த மண் வல்வெட்டித்துறையில் புலிகொடியும் ஏற்றப்பட்டுள்ளது.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கு இடம்பெற்றது. தமிழீழத்தை சித்தரிக்கும் வகையில் கேக் அமைந்திருந்தது சிறப்பு அம்சம். அத்துடன் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு உள்பட வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
முறி மோசடி தொடர்பில் கோப் குழு உறுப்பினர்களுக்கு அர்ஜூன் அலோசியஸ் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தால் அதனை அவர்கள் மக்களுக்கு கூறியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குரெஸ்ஸையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார். புத்தகம் எழுதுவதற்காகவே அலோசியஸூடன் தொடர்புகளை ஏறபடுத்தியதாக ஒருவர் கூறுகின்றார். புத்தகம் 2015 இல் எழுதப்பட்டது. 2016 இல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கோப் குழு விசாரணையில் தாமே தலைவராக செயற்பட்ட நிலையில், தமக்கு தொடர்புகளை
தமிழீழ மாவீரர் நாள் 2017 நாளை திங்கட்கிழமை தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பான சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ தேசியத் தலைவர் முதம்மைச் சுடரேற்றி மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தும் ஒளிப்படத்தைத் தாங்கியதாக அந்தச் சுவரொட்டிகள் அமைந்துள்ளன.
கிளிநொச்சி கந்தசாமி கோவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவ்ர்களின் உறவுகளை இலங்கை சர்வமதப் பேரவையின் குழுவினர் இன்று காலை சந்தித்துள்ளனர். சந்தித்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினது பிரச்சனைகள் சம்பந்தமாக கேட்டு தெரிந்து கொண்டதுடன் இப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தமது பூரண ஆதரவு எப்பொழுதும் இருக்கும் எனத் தெரிவித்தனர். இச் சந்திப்பில் இலங்கை சர்வமதப் பேரவையின் இணைப்பாளர்கள் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை உத்தேச அரசியல் அமைப்பிற்கு எதிரான மக்கள் கருத்துக் கணிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இதனை தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் நூற்றுக்கு ஐம்பத்தைந்து சதவீத வெற்றி போன்ற வெற்றிகள் தேவையில்லை. இந்த தேர்தல் தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்க தேவையில்லை என்ற மக்களின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டால் பிரிவினைவாத அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்படும் என
புத்தாக்கா பணிகளுக்காக தேசிய மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சை பிரிவின் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நிறுத்தப்படவுள்ளன. மருத்துவமனை பணிப்பாளர் அனில் ஜெயசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய தேசிய மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த நோயாளர்கள் கண்டி, கராபிட்டிய, ஜெயவர்தனபுர மருத்துவமனைகளுக்கு மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருதய நோய் சிகிச்சை பிரிவை புத்தாக்கம் செய்வதற்காக குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ளபோதும், அதன் பணிகள்
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டை 30 வருடங்களுக்குப் பின்னர் புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி கட்டமைப்பு, வான் கட்டமைப்பு மற்றும் மின்விசை கட்டமைப்பு என்பனவற்றின் செயல் திறன் குறைவடைந்த நிலையில் இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புனர் நிர்மாண திட்டத்திற்கு அமைய நீர்த்தேக்கத்தின் அடித்தளம் மற்றும் அணைக்கட்டமைப்பு என்பன ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எவ்.ஆர்.கே. அருப்பல குறிப்பிட்டுள்ளார்.விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டமைப்பு 120 மீட்டர் உயரத்தை கொண்டமைந்துள்ளதுடன், அதன்
உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துள்ளுள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனிதமந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது,
பிரதான இரு கட்சிகளுக்கு இடையில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் பி ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார். கலாவேவ பிரதேசத்தில் நேற்றயை தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.