புதையல் தோண்ட முயற்சித்த 6 பேர் கைது

Posted by - December 28, 2017

கிராதுருகோட்டே பகுதியில் புதையல் பெற்றுக்கொள்வதற்காக அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் தெமடன்அல்ல, கல்பொருயாய, பகுதியில் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பூஜை பொருட்கள், அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் கடுவலை, தெல்தெனிய, மொனராகலை, லுனுகல, செவனகல, மற்றும் கிராதுருகோட்டே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மாணவர்களே பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான இறுதித் திகதி அறிவிப்பு

Posted by - December 28, 2017

இடம்பெற்று முடிந்த 2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி பரீட்சைகள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம்  15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியட்டுள்ளது. இந்நிலையில், 163104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான அனுமதி பெறக்கூடிய வாய்ப்புள்ளதாகவும்  பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்

2017 க.பொ.த உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்.

Posted by - December 28, 2017

2017 க.பொ.த உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

வட்டு. யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் நால்வருக்கு 3ஏ

Posted by - December 28, 2017

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் 3ஏ பெறுபேற்றைப் பெற்றனர். இன்று வியாழக்கிழமை அதிகாலைவரை இணையத்தளத்தில் பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் கிடைக்கப்பெற்றன. யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் பிரபாகரன் பிரதீஸ் பெளதீக விஞ்ஞானத்தில் 3ஏ சித்தியைப் பெற்று ( இசற் புள்ளி- 2.3490) மாவட்ட மட்டத்தில் 8ஆவது நிலையையும் தேசிய ரீதியில் 77ஆவது நிலையையும் பெற்றார். அந்தப் பாடசாலையின் மாணவன் விக்டர் ஜெயக்குமார் வசந்த் கோட்ப்ரே பெளதீக விஞ்ஞானத்தில் 3ஏ சித்தியைப் பெற்று (இசற்

மானிப்பாயில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

Posted by - December 28, 2017

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சந்தேக நபர்கள் சங்கானை கட்டுடையைச் சோ்ந்த 18 மற்றும் 20 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சங்கானை – தேவாலய வீதி கொள்ளை, சண்டிலிப்பாய் திருட்டு, சுதுமலையில் மதகுரு வீட்டில் நகை, பணம் திருட்டு, வட்டுக்கோட்டை

கேப்­பாப்பு­லவு மக்­களின் 133 ஏக்கர் காணிகள் இன்று கைய­ளிக்­கப்­படும்- டி.எம்.சுவா­மி­நாதன்

Posted by - December 28, 2017

கேப்­பாப்பு­லவு மக்­க­ளுக்கு சொந்­த­மான 133ஏக்கர் காணிகள் இன்று அவர்­க­ளி­டத்தில் மீளவும் கைய­ளிக்­கப்­படும் என்று சிறைச்­சா­லை கள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் அறி­வித்­துள் ளார். இது தொடர்பில் அமைச்சர் சுவா­மி­நாதன் விடுத்­துள்ள அறி­விப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்டுள்­ள­தா­வது, தேசிய பாது­காப்புக் கருதி இலங்கைத் தரைப்­ப­டையின் பாது­காப்புப் படைத் தலை­மை­ய­க­மொன்­றாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வந்த கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவின் கேப்­பா­பி­லவு கிரா­மத்தில் 133 ஏக்கர் காணிகள்  அமைச்சின் ஊடாக 148 மில்­லியன் ரூபா படைத் தலை­மை­ய­கத்தை இட­மாற்­று­வ­தற்கு

பத்து பேருக்குமேல் வீடுவீடாக சென்று வாக்குகேட்க முடி­யாது

Posted by - December 28, 2017

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல்­க­ளுக்­காக வீடு வீடாக சென்று பிர­சார பணி­களில் ஈடு­ப­டு­வ­தற்கு கடும் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்ளன. மோதல்கள், வன்­மு­றைகள் இடம்பெ­று­வதை தவிர்க்கும் முக­மாக இந்த கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அதன்­படி 10 பேருக்கு மேல் குழு­வாக பிரசார நட­வ­டிக்­கை­களில் வீடு வீடாக செல்ல முடி­யாது என தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். அதன்­படி பிர­சார நட­வ­டிக்­கைகளில் 10  பேருக்கு மேல­தி­க­மானோர் பங்கேற்பின் அதனை சட்ட விரோத பேர­ணி­யாக கருதி கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும்

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார்

Posted by - December 28, 2017

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் என்று வன்னி பாரா­ளுமன்ற உறுப்­பினர் ந.சிவ­சக்தி ஆனந் தன் தெரி­வித்தார் வவு­னியா நக­ர­ச­பைக்­காக உதய சூரி­யன்­சின்­னத்தில் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்தில் போட்டியிடும் இ.கௌத­மனை ஆத­ரித்து நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு மேலும் கருத்து தெரி­வித்த அவர், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் ரெலோவும் புளொட்டும் இணைந்து போட்­டி­யிடும் கடைசி தேர்தல் இதுதான். ஏதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் மாகா­ண­சபை தேர்தல் நடை­பெற இருக்­கின்­றது.

25000 ரூபா தண்டப்பண சட்டம் இன்னும் தாமதம்- சிசிர கோதாகொட

Posted by - December 28, 2017

போக்குவரத்து சட்ட மீறல்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறிவிடும் சட்டத் திருத்தம் சட்டவாக்கல் திணைக்கத்தில் முடங்கிக் கிடப்பதாக போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படப் போகிறது என்ற செய்தி பரவியவுடன் வாகன விபத்துக்கள் குறைந்து கொண்டு சென்றன. இந்த சட்டம் தாமதமாவது விபத்துக்களை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

Posted by - December 28, 2017

க.பொ.த. உயர்தரப் பரீடசையின் இன்று அதிகாலை வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான  பெறுபேறுகளின்படி சகல துறைகளிலும் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபுர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான  டிலினி சந்துனிக்கா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனான சிறிதரன் துவாரகன் என்பவர் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை